Friday, July 27, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் மகிமைகளும் வரலாற்றுச் சிறப்புக்களும் .. (சிறப்பு கட்டுரை .....)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில். 

திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் புகழ் பெற்று விளங்குகிறது. இத்திருத்தலம் உருவாகி 600 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த 2016ம் ஆண்டு கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஐந்து அடுக்குகள் கொண்ட அழகிய இராஐ கோபுரம், மாடங்கள் மற்றும் பெரிய மண்டபங்கள் அழகாக பிரதான சாலையில் காட்சியளிப்பது பக்தர்களிள் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. 

Tuesday, July 24, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும் பிரதோஷ வழிபாடு ! ! ! 24.07.2018

மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய்பிறை திரயோதசி (13 ஆம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை நேரம் மட்டும் தான்.  திரயோதசி நாளில் மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும் பிரதோஷ காலமாகும்.

Monday, July 16, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும் தரவல்ல விநாயகர் சதுர்த்தி விரத வழிபாடு ! ! ! 16.07.2018


விநாயகர் சதுர்த்தி விரதத்தை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள்.

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும் உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.

Tuesday, July 10, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் சிவனருள் கிட்டும் பிரதோஷ விரத வழிபாடு ! ! ! 10.07.2018


பிரதோஷ வேளையில் பஞ்சபுராணம் பாடுவோம் (பிரதோஷ வழிபாடு சிறப்பு பதிவு)

பஞ்சபுராணம் பாடுதல் என்ற வழக்கம் முற்காலத்தில் நன்றாக இருந்து வந்துள்ளது. தற்காலத்தில் அவ்வழக்கம் சில கோயில்களில் மட்டுமே உள்ளது. சமயக் குரவர்கள், திருமூலர், சேக்கிழார், திருமாளிகைத் தேவர் ஆகியோர் பாடியவை திருமுறைகள் எனப்படுகின்றன.