Friday, July 27, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் மகிமைகளும் வரலாற்றுச் சிறப்புக்களும் .. (சிறப்பு கட்டுரை .....)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில். 

திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் புகழ் பெற்று விளங்குகிறது. இத்திருத்தலம் உருவாகி 600 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த 2016ம் ஆண்டு கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஐந்து அடுக்குகள் கொண்ட அழகிய இராஐ கோபுரம், மாடங்கள் மற்றும் பெரிய மண்டபங்கள் அழகாக பிரதான சாலையில் காட்சியளிப்பது பக்தர்களிள் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. 

கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே கோவில் வளாகம் கட்டப்பட்டுள்ளது. 

இந்திரலோகத்து வெள்ளையானை (ஐராவதம்) திருவெண்காடு எனும் புண்ணிய பதியில் சிறுபராயம் முதல் சிவபக்தனாக விளங்கிய ஐயம்பிள்ளை உடையாருக்கு ஆலமரநிழலில் காட்சி கொடுத்து ஆலயமாகிய ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார்.

இக் கோவிலை இலங்கைநாயக முதலியாரின் பேரானாகிய ஐயம்பிள்ளை உடையாரால் ஸ்தாபிக்கப்பட்டு அவர்களின் வம்சத்தினரால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த திருத்தலம் வந்து சித்திவிநாயகரிடம் மனம் உருகி, பிரார்த்தனை செய்ய, குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைத்து, நல்ல உத்தியோகம் கிடைத்து வாழ்வில் உயர்வு பெறுவது உறுதி. 

தொழிலில் நல்ல முன்னேற்றம், விவசாயத்தில் அதிக லாபம், நினைத்தபடி திருமண வாழ்க்கை கிடைப்பதும் நிச்சயம் என்கின்றனர் இதை அனுபவித்து உணர்ந்தவர்கள், பலனை அடைந்தவர்கள். 

தங்கள் நேர்த்தி கடனை, பால் அபிஷேகம் செய்து, பால் கொழுக்கட்டை படைத்தல், சிதறு தேங்காய் உடைத்தல், சதுர்த்தி விரதம் பூணுதல், அருகம்புல் மாலை சாத்துதல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவைகளால் நிறைவு செய்கின்றனர். 

எங்கு எப்படி செல்வது அன்பே சிவம் என்பதற்கேற்ப, தரிசனம் செய்யும் இடத்திலும் சரி, அர்ச்சகர்களிடமும் சரி, திருக்கோவில் நிர்வாகிகளிடமும் சரி இன்முகத்து டன் உபசரிக்கும் தன்மையை இங்கு காணலாம். 

மண்டைதீவு திருவெண்காடு எல்லையை மிதித்தாலே நம் தொல்லை வினைகள் இல்லை என்றாக்கும், திருவெண்காடு ஸ்ரீ அம்பலவாணர் சித்தி சித்திவிநாயகப்பெருமானையும், ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமந் ஆனந்தநடராஐ மூர்த்தியையும், திருவெண்காட்டிற்கு ஒருமுறையேனும் சென்று வழிபட்டு, வாழ்வில் சிறந்து விளங்க உங்களை யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் திருக்கோவிலுக்கு பயணிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

யாழ்ப்பாணப் பெருநகரில் இருந்து 9 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் நோக்கி மணித்தியாலயத்திற்கு ஒரு தடவை பேருந்து (பஸ்) செல்கிறது.
சுபம் !

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் 
வேறொன்று அறியேன் பராபரமே

"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு"

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'