Thursday, November 27, 2014

திருவெண்காட்டில் வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம் (26/11/2014)

http://www.thiruvenkadumandaitivu.com/2014/11/27112014.html


எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் படைத்து வணங்குகிறோம்.

Saturday, November 22, 2014

திருவருள் மிகு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு - இலங்கை



இந்துசமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் ஸ்ரீமத் இலங்காபுரியில் சைவத் தமிழர்கள் செறிந்து வாழும் வட மாநிலத்தின் தலை நகராம் யாழ்ப்பாணத்தின் தென் திசையில் வங்கக்கடலலைகள் தாலாட்டும் சப்த தீவுகளின் தலைத்தீவாக விளங்குவது மண்டைதீவு.  இங்கு திருவெண்காடு என்னும் புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையாரின் வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் இக்கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது.

Thursday, November 20, 2014

திருவெண்காட்டில் வரம் அருளும் பிரதோச வழிபாடு ! ! ! 20.11.2014


பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச்சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப்பொழுதில் ஈசனை வழிபட்டோமானால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

Tuesday, November 18, 2014

கார்த்திகை பிறந்தது சரண கோஷத்துடன் மாலை போட்டு விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் ! ! ! 17.11.2014



ஐயப்பனின் வரலாறு :

மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார்.

Friday, November 14, 2014

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான (ஐய வருஷ) வருடாந்த மகோற்சவம் - 2014 சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ! ! !


வரலாற்று சிறப்புமிக்க மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானின் (ஐய வருஷ) வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது 30.08.2014 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் சித்தி விநாயகப்பெருமானின் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாகவும் பக்தி பூர்பவமாகவும் நடைபெற்று  இனிதே நிறைவேறியது.

Monday, November 10, 2014

திருவெண்காட்டில் சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரத அனுஸ்டானம் 10.11.2014 சங்கடஹர சதுர்த்தி உருவான வரலாறு ! ! !


http://www.thiruvenkadumandaitivu.com/2014/11/10112014.html

பரத்வாஜ மகரிஷி ஒரு சமயம் நர்மதை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்தபோது மங்கை ஒருத்தியைப் பார்த்து மனம் மயங்கினார். மோகித்த அவர் அவளை அவந்தி நகருக்கு அழைத்துச் சென்று இல்லறம் நடத்தினார். அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த மங்கையோ தேவலோகத்துக்குத் திரும்பிச் சென்றாள். பரத்வாஜ மகரிஷியும் அவந்தி நகரிலேயே குழந்தையை விட்டு விட்டு நர்மதை நதிக் கரைக்கு சென்று பாதியில் விட்ட தவத்தை மீண்டும் தொடர்ந்தார். அந்த ஆண் குழந்தையை பூமாதேவி அரவணைத்து அங்காரகன் என்று பெயர் சூட்டினாள். ஒரு சமயம் அங்காரன் பூமாதேவியிடம், அம்மா என் தந்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று கேட்டான்.

Tuesday, November 4, 2014

திருவெண்காட்டில் சகல தோஷங்களும் நீக்கும் மஹா பிரதோச வழிபாடு ! ! ! 04.11.2014

http://www.thiruvenkadumandaitivu.com/2014/11/04112014.html

சிவபெருமானை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை, அதிலும் சிறந்தது சோமவாரம், அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி, அதனினும் சிறந்தது பிரதோஷம், பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். நோய் தீரவும், ஏழ்மை ஒழியவும், துயரங்கள் விலகவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.