சித்திவிநாயகப் பெருமானின் மகோற்சவ பெருவிழாவினைச் சிறப்பிக்க ஒத்துழைப்பு வழங்கிய மகோற்சவ பிரதம சிவாச்சாரியார் சிவசிஸ்ரீ சபா வாசுதேவக்குருக்கள் (சித்தங்கேணி சிவன் கோவில்) ஆலய நித்திய குருமணி மற்றும் ஏனைய அந்தணர்கள் அவர்கட்கும் மங்களவாத்திய கலைஞர்களுக்கும் ஒலி,ஒளி அமைப்பாளர்கள் மகோற்சவ கால விசேட திருவிழாக்களை வீடியோபதிவு செய்த நயினை அபிராமி வீடியோவுக்கும் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் உற்சவகால ஆலய பணியாட்கள் மற்றும் ஆலய தொண்டர்கள் திருவிழா உபயகாரர்கள் வழிபடுனோர் அன்னதான உபயகாரர்கள் பணியாட்கள் மேலும் உற்சவகாலத்தில் நன்னீர் வசதி மற்றும் சுற்று சூழல் திருவீதிக்கு தினந்தோறும் நீர் பாச்சிய வேலணை பிரதேசபை உபஅலுவலகம் - மண்டைதீவு மற்றும் இலங்கை பாதுகாப்பு படையினருக்கும் வெளி வீதியினை சீரமைப்புச் செய்த மெகா வீதீ புனரமைப்பு நிறுவனத்தினருக்கும்
இணையத்தளம் மூலம் உற்சவகால புகைப்படங்கள் காணொளிகளினை பதிவுசெய்து உலகபந்தில் பரந்து வாழும் சித்தி விநாயகப்பெருமானின் அடியவர்களின் மனக்கண்முன்னே கொண்டு சென்ற அனைத்து இணையத்தளங்களுக்கும்
- திருவெண்காடு இணையம் www.thiruvenkadu.com
- அல்லையூர் இணையம் www.allaiyoor.com
- சென்னீயூர் இணையம் www.senniyoor.com
- தீவகம் இணையம் www.theevagam.com
- மண்டைதீவு இணையம் www.mandaitivu-ch.com
- புங்குதீவு இணையம் www.pungudutivu.info
- நயினாதீவு இணையம் www.nainativu.org
- நெடுந்தீவு இணையம் www.neduntivu.com
- மண்கும்பான் இணையம் www.jaalmankumpan.com
- அனலை எக்ஸ்பிறஸ் www.analaiexpress.ca
- பணிப்புலம் இணையம் www.panippulam.com
- யாழ்ப்பாணம் இணையம் www.ourjaffna.com
- நிலா பிரான்ஸ் www.nilafrance.com
- வவுனியா இணையம் www.vavuniyanet.com
- ஆனைக்கோட்டை www.anaicoddai.com
சித்தி விநாயகப்பெருமானுக்கு பத்து தினங்களும் கவி வரிகள் தொடுத்து முகப்புத்தகங்களில் பகிர்ந்து கொண்ட பாலகவிஞர் நயினை அன்னைமகன் செ.ம. நவரூபன் அவர்களுக்கும்
மகோற்சவகால சிறப்பு மலர்கள் , மகோற்சவ நிகழ்வுகளை பிரசுரித்த நாளிதழ்களான வலம்புரி உதயன் தினக்குரல் பத்திரிகைகளுக்கும் மற்றும் மகோற்சவ நிகழ்வுகளை ஒலிபரப்பு செய்த யாழ்ப்பாணம் நவீன சந்தை வணிகலயம் விளம்பரசேவைக்கும்
சித்திவிநாயகப்பெருமானின் இரதோற்சவ திருவிழாவை வர்ணனை மூலம் அலங்கரித்த நயினை சமயச்சொற்பொழிவாளர் திரு இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் மகோற்சவ பத்துதினங்களும் சமய சொற்பொழிகள் சங்கீதக்கச்சேரிகள் பஐனைகள் நிகழ்த்திய பெருயோர்கள் மற்றும் மகோற்சவ நிகழ்வுகளை அறிவிப்புச் செய்த அறிவிப்பாளர்களுக்கும்
திருவிழாக்காலத்தில் அனைத்து வகையிலும் உதவி புரிந்த சித்தி விநாயகப்பெருமானின் மெய்யடியார்கள் அனைவருக்கும் எம் பெருமானின் பாதரவிந்தங்கள் பணிந்து மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு அவன் திருவருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.
இங்ஙனம்.
ஆலய தர்மகர்த்தாக்கள்
பொ.வி.திருநாவுக்கரசு
இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)
திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் -
மண்டைதீவு , இலங்கை.
ஆலய தர்மகர்த்தாக்கள்
பொ.வி.திருநாவுக்கரசு
இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)
திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் -
மண்டைதீவு , இலங்கை.