Sunday, November 29, 2020

மண்டைதீவு திருவெண்காட்டில் திருவருள் பெருகும் திருக்கார்த்திகை‬ தீபத் திருவிழா ! ! ! 29.11.2020




கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.