Thursday, November 24, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் மகத்துவம் நிறைந்த சனி பிரதோஷ விரத அனுஸ்டானங்கள் ! ! ! 26.11.2016


சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

Wednesday, November 16, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் நமக்கு வரும் சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி சௌபாக்கியம் தரவல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 17.11.2016


விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய "ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்" எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

Monday, November 14, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இரத்தினசபாபதிக்கு மாபெரும் அந்தஸ்து தரும் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம். 14.11.2016


துன்முகி ஆண்டு ஐப்பசி மாதம் 29ஆம் நாள் (14-11-2016). திங்கள் கிழமை . முழு நிலவுப் பெருநாள் (பௌர்ணமி) . 

சகல சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். இவ்வாண்டு வரும் ஐப்பசி மாத முழு நிலவுப் பெருநாள் திங்கட்கிழமை வருவது மிகவும் சிறப்பு . இத்திருநாளில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்ய நம்மால் இயன்ற பொருளை அருகிலுள்ள ஆலயங்களுக்கு வழங்கி இறைவனை அன்ன அலங்காரத் திருக்கோலத்தில் கண்டு வணங்கி மகிழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டுகிறோம்.

Saturday, November 12, 2016

திருவெண்காடு புண்ணிய சேஸ்திரத்தில் இன்று சனி மஹா பிரதோஷம் ! ! ! 12.11.2016 🌿🌟🌿


சனி மஹா பிரதோஷ விரதமிருந்து நமது மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் அகிலாணடகோடி பிரம்மாண்ட நாயகனாய், கருணைக்கடலாய் எழுந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தியையும் அருள்மிகு ஸ்ரீ காசிவிசாலாட்சி அம்பாள்  உடனுறை ஸ்ரீ காசிவிஸ்வநாத மூர்தியையும்  வணங்கி ஐந்து வருடங்கள் சிவ வழிபாடு செய்த பலன்களை பெறலாம்...

தினம் தோறும் மாலை 4.30 மணி முதல் 6. 00 மணி வரையிலான காலம் நித்ய பிரதோஷ காலம் எனப்படும். இந்த சமயத்தில் இறைவனை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் மாதப் பிரதோஷம் எனப்படும்.

திருவெண்காடு அமர்ந்த அரசே போற்றி!! 
திருவெண்காடுறைவோன்  போற்றி! போற்றி!!
அருள்மிகு சிவகாம சுந்தரி உடனாய் 
அருள்மிகு நடராஜர் திருவடிகள் போற்றி!
அருள்மிகு  நந்தியம்பெருமான்  திருவடிகள் போற்றி!  போற்றி!

Friday, November 11, 2016

பன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020


வருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல  நன்மை  தீமைகளை வெளிக்காட்டியுள்ளது….

எந்த எந்த ராசிகளுக்கு சனி பெயர்ச்சி சாதகம் யாருக்கு பாதகம்…

எத்தனை ஆண்டுகள் எப்படி பயணிக்கப் போகிறது…

Wednesday, November 2, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வளம் தரும் விநாயகர் சதுர்த்தி ! ! ! 03.11.2016


அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.
அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.