Saturday, April 30, 2016

‪திருவெண்காடு ‎பொற்சபையில்‬ ஆடல் அரசனுக்கு சித்திரை திருவோணம்‬ திருநீராட்டல் (30.04.2016)


தேவர்கள் தினமும் ஆறு முறை நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம். அவர்களுக்கு ஒரு நாள் என்பது, பூலோகத்தில் ஒரு ஆண்டுக்குச் சமமானது. இதன் அடிப்படையில், சிவன் கோயில்களில் ஆண்டுக்கு ஆறு முறை நடராஜர் அபிஷேகம் நடக்கிறது.

Monday, April 25, 2016

திருவெண்காட்டில் அளவு கடந்த ஆனந்தத்தை தரவல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 25.04.2016


விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

Saturday, April 23, 2016

திருவெண்காட்டு பெருமானுக்கு திருக்குடமுழுக்கு ! ! ! 04.09.2016



திர்வரும் புரட்டாதி மாதம் 04.09.2016 ஞாயிற்றுக் கிழமை காலை 7:04 மேல் 8:58 மணிக்கும் இடையில் வெண்காட்டுப்பெருமானுக்கும் ஸ்ரீ சிவகாமியம்பிகை சமேத ஆனந்த நடராஐமுர்த்திக்கும் ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை சமேத காசி விஸ்வநாதமூர்த்திக்கும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பஞ்சதள இராஐகோபுரத்துக்கும்  திருக்குடமுழுக்கு நடக்கப்போகிறது. 

''இன்னோரு ஜென்மம் இருந்தா அப்போது பிறப்போம்; 
ஒன்னோடு ஒன்னா கலந்து அன்போட இருப்போம்''.

ஆம்! சித்திவிநாயகப்பெருமான் மெய்யடியார்களே! இன்னோரு ஜென்மம் இருந்தா அப்போதும் நாமெல்லாம் திருவெண்காடு சித்திவிநாயகன் மேல் இப்போது போல இதய பூர்வமாக ஒன்னோடு ஒன்னா கலந்து அன்பு செலுத்தி ''அன்பே சிவம்'' என்பதை உணர்ந்து அகிலத்துக்கு உரைப்போம்.

"வர இருக்கும் பிறவியிலும் வாழ்த்திடுவோம் நின் அருளை"."

வர இருக்கும் பிறவியிலும் எம்பெருமான் திருவெண்காடு சித்திவிநாயகன் புகழ் பாடுவோம். அதற்கு இன்னோரு ஜென்மமும் வேண்டும்.

"வேழமுகத்து விநாயகனை தொழ வாழ்வு மிகுத்து வரும்"


குறிப்பு - திருவெண்காடு புண்ணிய சேஷ்திரமும் மண்டைதீவு கிராமமும் இந்திரலோகம் போல் காட்சியளிக்கவிருக்கும் இப்புனித நாளில் இவ்விரிந்த உலகில் பரந்து வாழும் சித்திவிநாயகப் பெருமான் மெய்யடியார்கள் அனைவரும் உங்கள் விமானச் சீட்டுக்களை முன்பதிவு செய்து எம்பெருமானின் திருக்குடமுழுக்கு திருக்காட்சியை கண்ணாரக் கண்டு பேரானந்த மடைவீர்களாக !


இங்ஙனம்.

பொ.வி.திருநாவுக்கரசு

இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)

ஆலய தர்மகர்த்தாக்கள்

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்

யாழ்ப்பாணம் இலங்கை





Wednesday, April 20, 2016

திருவெண்காட்டில் பாவ வினைகளை போக்கி அருளும் சித்திரா பௌர்ணமி விரத வழிபாடு ! ! ! 21.04.2016


ந்திரனை ஸ்ரீநிவாசன் தனது பாதங்களின் அடியிலும், சிவபெருமான் பிறை நிலவாகத் தன் தலையிலும் கொண்டுள்ளார். அம்பாளோ பக்தனுக்கு இறங்கித் தனது காதுத்தோட்டை எறிந்து வானில் சந்திரனை உருவாக்கியவள். சந்திர சகோதரி எனப் போற்றப்படுபவள் மகாலஷ்மி. பெண் ஜாதகத்தில் சந்திரன் சிறப்பிடம் பெற்றால் அவள் மிக அழகாக இருப்பாள் என்று அப்பெண்ணைப் பார்க்காமலேயே சொல்லிவிடலாம் என்பது நம்பிக்கை. இப்படி பல பெருமைகளைக் கொண்ட சந்திரன் ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களிலும் முழு நிலவாய்த் தோன்றும் நாள் பெளர்ணமி. சித்திரை மாதத்தில் தோன்றும் சந்திரன் அறுபத்துநான்கு கலைகளையும் முழுமையாகக் கொண்டு பிரகாசமாக ஒளி வழங்குவதால் இம்மாதப் பெளர்ணமி, ஆண்டின் அரிதான பெளர்ணமியாகக் கொள்ளப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Tuesday, April 19, 2016

திருவெண்காட்டில் சகல தோஷங்களும் நீக்கவல்ல பிரதோஷ வழிபாடு ! ! ! 19.04.2016


ரவும் பகலும் சந்திக்கின்ற நேரத்திற்கு `உஷத் காலம்’ என்று பெயர். உஷத் காலத்தை பகற்பொழுதின் முகம் என்று சொல்வார்கள். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய உஷா. அவளது பெயரிலேயே இது உஷத்காலம் என அழைக்கப்படுகிறது.

இதற்கு நேர் எதிராக பகலும் இரவும் சந்திக்கும் நேரம் `பிரத்யுஷத் காலம்’ எனப்படும். சூரியனின் இன்னொரு மனைவியாகிய பிரத்யுஷா இக்காலத்திற்கு அதி தேவதை என்பதால் அவள் பெயரால் இது அழைக்கப்பட்டு, இப்போது பேச்சு வழக்கில் “பிரதோஷ காலம்” என அழைக்கப்படுகிறது என்பார்கள்.

Thursday, April 14, 2016

திருவெண்காட்டில் ஸ்ரீ "துர்முகி" வருட சித்திரை தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு ! ! ! 13.04.2016 (படங்கள் இணைப்பு )


நாம் வேண்டும் வரங்களையெல்லாம் விரைந்து தரும் சித்தி விநாயகன் நாம் செய்யும் நல்ல செயல்களுக்கு துணை நின்று அனைத்து வெற்றிகளையும் அள்ளித் தருவான். வினை தீர்க்கும் நாயகனான விநாயகப் பெருமானை வணங்கினால், தீவினைகள் யாவும் நீங்கி, நல்லவை அனைத்தும் நம்மைத்தேடி வரும். உங்கள் வாழ்க்கையில் என்றும் மங்களமான சுப நிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடைபெற அருள் புரிவான் திருவெண்காடுறை சித்தி விநாயகன்.

Wednesday, April 13, 2016

திருவெண்காட்டில் துர்முகி வருடப் பிறப்பு - 14.04.2016

ன்மத வருடம் பங்குனி மாதம் 31 ஆம் நாள் 13.04.2016 புதன்கிழமை முன்னிரவு 6 மணி 36 நிமிடத்தில் தமிழ் வருடங்கள் அறுபதில் முப்பதாவது வருடமாகிய இப் புதுவருடம் பிறக்கின்றது. அன்று பிற்பகல் 2.36 மணிமுதல் முன்னிரவு 10.36 வரை விஷூபுண்ய காலமாகும். இக்காலத்தில் இறைவனை நோக்கி சங்கற்பம் செய்து மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து பச்சை, வெள்ளை நிறமுடைய ஆடைகள் தரித்து ஆபரணம் அணிந்து, குலதெய்வம் இஷ்ட தெய்வங்களைப் பிரார்த்தித்து, பெரியோர்கள் ஆசிபெற்று, மங்கள பொருட்களைத் தரிசித்து, பஞ்சாங்கம் வாசித்தும் மறுநாள் 14.04.2016 வியாழக்கிழமை அதிகாலையில் எழுந்து வைகறையில் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு, கோபூஜை செய்து பசுவுக்கு உணவளித்து தானதர்மங்கள் இயற்றி வருவது உகந்தது. எல்லோருக்கும் இப்புத்தாண்டு இன்பமாய் அமைய துவாரகா நிலையாதி திருவெண்காடு சித்தி விநாயபெருமானை பிரார்த்திக்கின்றோம்.

Saturday, April 9, 2016

திருவெண்காட்டில் அளப்பரிய சக்தியால் அளவற்ற செல்வத்தை தரவல்ல சக்திகணபதி சதுர்த்தி ! ! ! 10.04.2016


சித்திரை மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி நோன்பை கடைபிடிப்பதால் புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கப்பெறும். இதனை விஷ்ணு லோகம் என்பார்கள் ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி வருகிறது. அன்றைய தினங்களில் விநாயகரை நோக்கி நோன்பு அனுஷ்டிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். 

சக்திகணபதி சதுர்த்தி  நாளில் அதிகாலையில் நீராடி, விரதமிருந்து பிள்ளையாரை வழிபட நல்ல பலன் கிட்டும் என்பது ஐதீகம். சக்திகணபதி சதுர்த்தி அன்று மாலை வரை உணவு அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும்.

Tuesday, April 5, 2016

"தெய்வீக மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருவெண்காடு மண்டைதீவு பற்றி தெரிந்து கொள்வோம்."



சித்திவிநாயகர் திருக்கோவில் , யாழ் மாவட்டம் தீவகத்தில்  அமைந்துள்ளது. திருவெண்காடு  மண்டைதீவு என்ற கிராமம், யாழ் நகரில் இருந்து  நயினாதீவு செல்லும் நெடுஞ்சாலையில் யாழ்ப்பாணத்தில்  இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

இக்கிராமத்தின் புகழுக்கு காரணம் இங்குள்ள திருவெண்காடு சித்திவிநாயகர் திருக்கோவில் ஆகும்.  சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.

Monday, April 4, 2016

திருவெண்காட்டில் அறிவு வளரவும், நினைவாற்றல் பெருகவும், தோஷங்கள் நீங்கவும் பிரதோஷ வழிபாடு 05.04.2016


பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.