சித்திரை மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி நோன்பை கடைபிடிப்பதால் புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கப்பெறும். இதனை விஷ்ணு லோகம் என்பார்கள் ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி வருகிறது. அன்றைய தினங்களில் விநாயகரை நோக்கி நோன்பு அனுஷ்டிப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
சக்திகணபதி சதுர்த்தி நாளில் அதிகாலையில் நீராடி, விரதமிருந்து பிள்ளையாரை வழிபட நல்ல பலன் கிட்டும் என்பது ஐதீகம். சக்திகணபதி சதுர்த்தி அன்று மாலை வரை உணவு அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும்.
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwzzSvBkdXgwLjqHWzOLa0PwEYezKR4UwOsyDeiV5eik03VKM9vyPjHkRomIzffnP1lwJyY3U-8tMs3Kyfe6C0LSwjQyX5OE4RTQdBCdy43WiwM1LdhtjnB44JrAawzvmG0WZVdtv8cXM/s1600/01+%25281%2529.jpg)
கண்ணென்று கொண்டதுமே காண்பதற்கு உனையன்றி
மண்ணினிலே வேறுண்டோ மானிடர் துயர்தீர்ப்போன்
மண்ணினிலே வேறுண்டோ மானிடர் துயர்தீர்ப்போன்
எண்ணுவோர்க்கு இவ்வுலக இன்பமெலாம் ஈயத்
திருவெண்காட்டில் உறைகின்றான் வேண்டியவன் தாள்சேர்வீர்
முடியாதவர்கள் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
சக்திகணபதி சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக்கொள்ள வேண்டும்.
மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்.
யாழ்ப்பாணம் - இலங்கை
ஸ்ரீ லக்ஷ்மி கணபதி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuzkiZecwfhEoMtVDCNGixK2PESzWB9GdDJes-z60ZSgoRkSJaPoO_0XDUPDmbXBDDi9ZGnTTpa_S6bhyphenhyphenW8qfFWHbagT_Y9rj-MiAibN-7jUzo9VkHRLKPtAKVz36GobE5udQN0p_-bko/s1600/1+%252873%2529.jpg)
திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் பரிவாரமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி கணபதி
அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபாவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும்.
"எளியோர்க்கு எளியோனாக இரங்கி வரும் எம்பெருமானே!
எங்களுடைய குற்றங்களை எல்லாம் பொறுத்தருள்க!
எல்லாக் குறைகளையும் நீக்கி எல்லாரையும் காத்தருள்க!"
விரதத்தின் பலன்கள்
இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் உண்டாகும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும் என்றும் நம்பப்படுகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-U-Q0BpmySnnseC3FzKgoF6Pfb2fe0niDqpo4qS4EPjaP3fOOoT2hOOhr0WHj_K0IGhodrjc1jSbCGzhyphenhyphenCppUM5sQAISIOwNLWBGRlkpXIIBdfES4gYdWqTasHF7NrnXuBNUm2jzh_2Y/s1600/1991.jpg)
நம்முடன் திருவெண்காடுறை சித்தி விநாயகன்.
சக்திகணபதி சதுர்த்தியான இன்று நீங்கள் விநாயகர் முன் அமர்ந்து சொல்ல வேண்டியது இதுவே. இந்த பிரார்த்தனையை சதுர்த்தியன்று மட்டுமின்றி, தினமும் காலையில் நீராடியவுடன் விநாயகர் முன் அமர்ந்து சொன்னால் எந்த தோஷமும் தொலைந்து போகும். உயர்ந்த புகழ் ஏற்படும். நல்ல குழந்தைகள் அமைவார்கள். எதையும் சாதிக்கும் ஆற்றல் கிடைக்கும்.
"கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவா வரம் தர காத்திருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே! ஒப்பில்லாத உயர்ந்த தயாளகுணமுள்ளவனே! கஜாமுகாசுரனை வென்றவனே! கெட்டதை அழித்து நல்லதைச் செய்து என்னைக் காக்கும் விநாயகனே! உனக்கு என் வணக்கம்."
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiezavZSynrexlngFYuHfq-oE9wfvBW63t6ohx74ZFP0A4SAJ5QfDiWSgS3pkefdnD7MZZqbmq-7PgFdYyyb6Z0P1FhOynT9Dxm1aUhM-3m28LbiCAdFdp06qYmsiL8ys6gnEevaRyQPR8/s1600/02.jpg)
"இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளி கொண்டவனே! பாவங்களைக் களைந்து சொர்க்கத்தைத் தருவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்கவனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் அளவற்ற செல்வத்தை தருபவனே! எல்லையில்லாத பரம்பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து அருளை வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்."
"உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனநிறைவைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட குணமாகக் கொள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாகரனே! சகிப்புத்தன்மை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்."
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw2ZdyeTS5Sv-t30-y8t8GZrauwzNB8Fk8C-yrEGfyUVd_eKGi66H-IMDBeRYad63JQvVneo5VGztEuf_2Ega1BHAPtU0TERUdCpRQDmtbJHqlc8xeNPOxFa6JQZQWFtHBWl1icA0CIpA/s1600/ganesha-video.gif)
"திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து வை. தூய்மையான மனதைக் கொடு. உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றி பெற துணை நிற்பவனே! கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை வைத்து வணங்குகிறேன். எம்பெருமானே! நீ வாழ்க, வாழ்க!"
"பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை உடையவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் மைந்தனே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! கஷ்டங்களை நீக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப்பொருளே! யானை முக கணேசா! காலமெல்லாம் உன்னையே நினைத்து, வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். விநாயகனே! சரணம்.. சரணம்... சரணம்."
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnMSWQrNcCZUzUOGhUr53hg3zqZKHgNkjCIChpGjz2sZlL9gUbeYTOHjq65pIKot-VcDKtIIvFAuoI_kPEY7TO4_5GpQCGvP_4mgfOfy9lvK401V5hhVJuvy6z5oN5q0edoSQj28nIlnc/s1600/03.jpg)
அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபாவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சக்திகணபதி சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,
"ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்"
எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.
"நாயேன் பல பிழைகள் செய்து களைத்து உனைநாடி வந்தேன்
நீயே சரணம் நினதருளே சரணம் சரணம் சித்தி விநாயகா"
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'