Wednesday, December 25, 2013

விநாயகரின் 21 திருநாமங்களும் அவற்றின் விளக்கமும் . . . (சுருக்கம்)

எளியவர்களுக்கெல்லாம் எளியவராய் விளங்கும் விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடி, குளக்கரை போன்ற இடங்களில் அமர்ந்துதான் தரிசனம் தருகிறார். இவருக்கு படைக்கப்படும் பொருட்களும் எளிமையானவையே. 

கவனிப்பாரற்று காட்டில் பூத்துக் கிடக்கும் எருக்கம் பூ, வாய்க்கால் வரப்புகளில் பரவலாக முளைந்திருக்கும் அறுகம்புல் போன்ற மிக எளிமையான பொருட்களைத் தாம் ஏற்றுக் கொண்டு, தன் பக்தர்களுக்கு அருளை வெள்ளமென பெருக்கி அருள்கிறார். இவருக்கு இருபத்தோரு திருநாமங்கள் உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. 

என்ன அவை?

Friday, December 13, 2013

திருவெண்காட்டில் ஆருத்ரா தரிசனம் ! ! ! (18.12.2013)

                         


எதிர்வரும் புதன்கிழமை (18/12/2013) அதிகாலை 2.30 மணியளவில் நடராஜப் பெருமானிற்கு அபிஷேகம் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து காலை 5.00 மணியளவில் "ஆருத்ரா தரிசனம்" நடைபெறும்.

ஆர்த்த பிறவித் துயர் கெட, நாம் ஆர்த்து ஆடும்
தீர்த்தன்; நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும்
கூத்தன்; இவ் வானும், குவலயமும், எல்லோமும்,
காத்தும், படைத்தும், கரந்தும், விளையாடி,
வார்த்தையும் பேசி, வளை சிலம்ப, வார் கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய, அணி குழல்மேல் வண்டு ஆர்ப்ப,
பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொன் பாதம்
ஏத்தி, இரும் சுனை நீர் ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

Monday, December 9, 2013

திருவெண்காட்டில் திருவெம்பாவை ஆரம்பம் ! ! ! (09.12.2013)

                                       திருவெம்பாவை விரதம்


ரம்பொருளாக இப்பூவுலகை காத்தருள்கின்ற சிவனுக்குரிய விரதங்களில் திருவெம்பாவையும் திருவாதிரையும் மிக்க சிறப்புக்கள் மிகுந்தது என்று கூறப்படுகின்ற அதேநேரம் இதை பாவை நோன்பு என்றும் அழைக்கின்றனர்.

திருவெண்காட்டில் இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 08/12/2013 (படங்கள்)

Wednesday, December 4, 2013

திருவெண்காட்டில் கஜமுகாசூரன் போர்...

 கஜமுகாசூரன் போர் - 08-12-2013 
  1. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08-12-2013) மதியம் 2:00 மணியழவில் விநாயகப் பெருமானிற்கு அபிஷேகம் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமானிற்கு விசேட பூசைகள் நடைபெற்று பிள்ளையார் கதைப்படிப்பைத் தொடர்ந்து மாலை 4:30 மணியழவில் கஜமுகாசூரன் போர் நடைபெறும்