Thursday, March 30, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் குன்றாத செல்வம் தரும் சக்தி கணபதி சதுர்த்தி ! ! ! 31.03.2017


அலிங்கிய தேவீம் ஹரிதம் நிஷ்னாம்

பரஸ்பரா ஷ்லிஷ்டக தீ நிவேஷம்

சந்த்யா ருணம் பாஷஷ்ருணிம் வஹஸ்தம்

பயபஹம் சக்தி கணேச மீதே.

மேலே உள்ள படத்தில் நாம் காண்பது கணபதியின் உயரிய வடிவமான சக்தி கணபதி ஆகும். கணபதியின் பல்வேறு வடிவங்களில் இவர் தான் மிக மிக மிக சக்தி வாய்ந்தவர். இந்த வடிவம் தந்திர வழிபாட்டில் மட்டுமே காணப்படுகிறது.

Friday, March 24, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் சங்கடங்கள் தீர்க்கும் சனி மஹா பிரதோஷ வழிபாடு ! ! ! 25.03.2017


பிரதோஷ வேளையில் பஞ்சபுராணம் பாடுவோம் 

பிரதோஷ வழிபாடு சிறப்பு பதிவு

பஞ்சபுராணம் பாடுதல் என்ற வழக்கம் முற்காலத்தில் நன்றாக இருந்து வந்துள்ளது. தற்காலத்தில் அவ்வழக்கம் சில கோயில்களில் மட்டுமே உள்ளது. சமயக் குரவர்கள், திருமூலர், சேக்கிழார், திருமாளிகைத் தேவர் ஆகியோர் பாடியவை திருமுறைகள் எனப்படுகின்றன. அவற்றில் தேவாரம் (7 திருமுறைகள்), திருவாசகம் (திருக்கோவையார்), திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) ஆகிய ஐந்தில் ஒவ்வொரு பாடல் பாடுவது இன்று வழக்காற்றில் உள்ளது. இதுவே பஞ்சபுராணம் பாடுதல் எனப்படுகிறது.

Wednesday, March 15, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் சங்கடஹர சதுர்த்தி ! ! ! 16.03.2017


சங்கடஹர சதுர்த்தி நன்நாளில் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான திருப்பல்லாண்டை பாடி துன்பங்களை தீர்க்கும் தும்பிக்கையான் திருக்கோவில் நாடி தூயவனின் திருவடியை வணங்குவோம்.

Friday, March 10, 2017

திருவெண்காடு பொற்சபையில் ஆடல் அரசனுக்கு மாசி மாத வளர்பிறை சதுர்த்தி திருநீராடல் ! ! ! 11.03.2017


நாள் : 11-03-2017 சனிக்கிழமை மாலை மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி

இடம் : அருள்மிகு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு யாழ்ப்பாணம் இலங்கை

இவ்வுலகில் நம் ஆலயங்களில் ஆறுகாலப் பூசை நிகழ்வதைப்போல், தேவர்களும் இறைவனுக்கு தினமும் ஆறு நேர பூசை செய்வதாக சாத்திரங்கள் கூறுகின்றன.

Thursday, March 9, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியம் கிட்டும் பிரதோஷ வழிபாடு ! ! ! 10.03.2017


மசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?

நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு
புந்தியில் ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கும் குணம் நிறை மக்கள் சேர்வர்
சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே."

Thursday, March 2, 2017

திருவெண்காட்டில் இடையூறுகளை விலக்கி காரிய வெற்றியளிக்கவல்ல சதுர்த்தி ! ! ! 01.03.2017


"அன்பினுக்கு இரங்கும் அருக்கடல்!..
திருவெண்காடுறை சித்திவிநாயகனின்
திருக்கழல் சிந்தை செய்வோம்!."

விநாயகர் சதுர்த்தி வேளையில் ஔவையார் அருளிய விநாயகர் அகவலைப்பாடி சித்தி விநாயகப்பெருமானை வணங்கி வளம் பெறுவோம் ! ...

விநாயகர் அகவல் 

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)