Thursday, March 30, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் குன்றாத செல்வம் தரும் சக்தி கணபதி சதுர்த்தி ! ! ! 31.03.2017


அலிங்கிய தேவீம் ஹரிதம் நிஷ்னாம்

பரஸ்பரா ஷ்லிஷ்டக தீ நிவேஷம்

சந்த்யா ருணம் பாஷஷ்ருணிம் வஹஸ்தம்

பயபஹம் சக்தி கணேச மீதே.

மேலே உள்ள படத்தில் நாம் காண்பது கணபதியின் உயரிய வடிவமான சக்தி கணபதி ஆகும். கணபதியின் பல்வேறு வடிவங்களில் இவர் தான் மிக மிக மிக சக்தி வாய்ந்தவர். இந்த வடிவம் தந்திர வழிபாட்டில் மட்டுமே காணப்படுகிறது.

இவர் பச்சைநிறமுடைய தனது சக்தியை (மனைவி) தனது இடது தொடை மீது அமர்த்தி இருப்பார். இவர் சூரியன் மறையும் காலத்தில் உள்ள வானத்தின் இளஞ்சிவப்பான நிறமுடையவர். ஒரு கரத்தில் பாசத்தை உடையவர். மற்றொரு கரத்தில் பூங்கொத்தினை உடையவர். மற்றொரு கரத்தில் அபய முத்திரை காட்டுபவர். மற்றொரு கரத்தில் தனது மனைவியை அணைத்துக் மகிழ்ச்சியாக இருப்பவர்.

சதுர்புஜம் பாசதரம் கணேசம்

ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்

லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்

ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா

அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்

லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்

இந்த வடிவம் வட இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது. இவரின் பெருமையை அறிந்த முதலாம் குலோத்துங்க சோழன் இவரை தினமும் வழிபாடு செய்து வந்துள்ளான். முதலாம் குலோத்துங்க சோழன் வழிபாடு செய்த மூன்று முக்கிய தெய்வங்களில் இவரே மிகவும் முக்கியமானவர்.

முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் எப்போதும் போரும் அதில் வெற்றி மட்டுமே இருந்திருக்கிறது. அவனது படைத்தலைவன் கருணாகர தொண்டைமான் சக்தி கணபதியை வணங்கியே போருக்கு சென்றிருக்கிறான். 

முதலாம் குலோத்துங்கனின் காலத்தில் அவனது நாட்டில் பஞ்சம் என்பதே இல்லாமல் இருந்திருக்கிறது. நாடே செல்வ செழிப்புடன் இருந்திருக்கிறது. ஒரு தடவை போர் நடத்தினாலே நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். இருப்பினும் முதலாம் குலோத்துங்கன் தொடர்ந்து போர்களை நடத்தியும் அவனது குன்றாத செல்வத்திற்கு காரணம் அவனது சக்தி கணபதி வழிபாடு தான்.

முதலாம் குலோத்துங்கனின் கலிங்கத்து வெற்றியை கலிங்கத்துப்பரணி பாடுகிறது. இந்த வெற்றிக்கு காரணம் அவன் செய்த மூன்று தெய்வங்களின் வழிபாடு தான் காரணமாக அமைந்திருக்கிறது. 

நாமும் இத்தகைய கணபதியின் உயரிய வடிவத்தினை தினமும் வழிபட்டு அளப்பறிய செல்வமும், மனதில் நிம்மதியும், மனமகிழ்ச்சியும், மனதில் துணிவும், எக்காரியத்திலும் வெற்றியையும் பெறுவோம்.

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்தி விட்டு இவரது வழிபாட்டை முதலில் சதுர்த்தி நாளில் தொடங்க வேண்டும். இவரது படத்தை அச்சிட்டு பூசை அறையில் வைத்துக் கொண்டு இரண்டு இலுப்பை எண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபாட்டினை துவக்கவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது விநாயகருக்கு பிடித்தமான பொருட்களை வைத்து துவக்கவும். பின்பு இரண்டு இலுப்பை எண்ணெய் தீபங்கள் மட்டுமே போதுமானது.

முதலில் விநாயகர் ஆலயத்தில் தேய்பிறை சதுர்த்தி அன்று மேற்கண்ட துதியை ஒரு முறை செபித்து பின்பு “ஓம் ஹ்ரீம் சக்தி கணபதயே நமஹ” என்று 108 முறை செபிக்க வேண்டும். பின்பு வீடு வந்து சக்தி கணபதி படத்தின் முன்பு 27 முறை செபிக்க வேண்டும். பிறகு தினமும் வீட்டில் 27 முறை செபித்தாலே போதுமானது. 

இவரை வழிபாடு செய்வதால் அளப்பறிய செல்வமும், மனதில் நிம்மதியும், மனமகிழ்ச்சியும் உண்டாகும். செல்வத்திற்கு என்றும் குறைவு வராது. மனதில் துணிவும், எக்காரியத்திலும் வெற்றியும் உண்டாகும்.

முதலாம் குலோத்துங்கன் வழிபட்ட மூன்று தெய்வங்களில் மற்ற இரண்டு தெய்வங்கள் பற்றி தனியாக பதிவுகள் வெளிவரும்.


ஓம் ஹ்ரீம் சக்தி கணபதயே நமஹ

ஓம் கம் கணபதயே நமஹ...!!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'