Friday, May 30, 2014

விக்கினங்களை தீர்க்க வல்ல விநாயகப்பெருமானின் சிறப்பு செய்திகள் ! ! !


* க்ர துண்டர், மகோத்ரதர், கஜானனர், லம்போதரர், விகடர்,விக்னராஜர், தூமரவர்ணர், சூர்ப்பகர்ணர் என்னும் எட்டு அவதாரங்கள் விநாயகர் எடுத்ததாக விநாயகர்புராணம் கூறுகிறது.

* சாணம், களிமண், மஞ்சள், வெல்லம், சந்தனம், அரிசிமா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பிடித்து விநாயகரை வழிபடலாம். இதனையே “பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று சொலவடையாகக் கூறுவர்.

Thursday, May 29, 2014

கோபுர தரிசனத்தின் மாண்பும் மகத்துவமும்...."கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பது பழமொழி என்பதைக் விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுரத்தை வணங்கிச் செல்வதை இன்றைக்கும் காண முடியும்.

Wednesday, May 28, 2014

காசியில் குளித்தால் பாவம் போகுமா ?


இறைவனும் இறைவியும் ஒரு நாள் வான வீதியில் போகும்போது, காசிக்கு மேலே போக வேண்டியதா இருந்துச்சு. காசியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து குளிக்கிறதை பார்த்த பார்வதி தேவி, பரமசிவன் கிட்டே, "சுவாமி... இங்கே பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து தினமும் பாவம் போகும்னு நம்பி குளிக்கிறாங்க. அப்படியிருக்க இவங்கள்ல நிறைய பேர் இறந்த பிறகு நரகத்துக்கு வர்றமாதிரி எனக்கு தெரியுதே... இவங்க பாவமெல்லாம் போன மாதிரி தெரியலியே... மக்களை இப்படி நாம ஏமாற்றலாமா? இது நியாயமா?" என்று கேட்கிறார்.

Tuesday, May 27, 2014

விநாயகர் தத்துவம் (சீரடி பாபாவின் விளக்கம்)


கணேசரின் யானைத் தலையின் தத்துவம் யாதெனில் யானை சிறந்த அறிவு படைத்தது. யானைக்கு மேதா சக்தி அதிகம் மேலும் யானையின் காதுகள் பெரியதாக இருப்பதால் நுண்ணிய சப்தத்தைக் கூட அதனால் கிரகிக்க முடிகின்றது. இறைவன் புகழைக் கேட்பது என்ற ஆன்மீக சாதனையின் முதற்படிக்கு காதுகள் கூர்மையாக இருப்பது அவசியம் யானை புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் ஓரே மாதிரி எடுத்துக் கொள்கின்றது. தேவையற்றவையை உதறி விடுகின்றது. நல்ல விஷயங்களை மௌனமாக ஏற்றுக்கொள்கின்றது. இவ்வாறு மனித குலத்திற்கு அத்தியாவசியமான பாடங்களை விநாயகர் நமக்கு கற்றுத் தருகிறார்.

Monday, May 26, 2014

திருவெண்காட்டில் பிரதோச விரதம் (26.05.2014)பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோஷ காலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும்.

குரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)


திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவானுக்கு உகந்த குரு வாரமே (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாகிறது. இதனை விசேஷமானதாகவே கருத வேண்டும். கடகத்தில் உச்சம் பெற்ற குரு, நன்மை செய்ய தயங்க மாட்டார். கடகத்தில் இருக்கும் குருவை, சனி 10-ம் பார்வையாக பார்ப்பதால், நாட்டு மக்களுக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆலயங்கள் புதுபிக்கப்படும்.

ஆனைமுகனுக்கு ஏன் அறுகம்புல்?சாதாரணமாக கிடைப்பதாலேயே மிகச் சிறந்தவைகளின் மதிப்புகளை நாம் உணரத் தவறி விடுகிறோம். அது புல்லில் தொடங்கி மனிதன் வரை பொருந்தும்.நம் வீட்டுத் தோட்டங்களில் சாதாரணமாக வளர்ந்து கிடக்கும் அறுகம்புல் பற்றி நமக்குத் தெரியுமா? ‘விநாயகருக்கு மாலையா கட்டி அம்மா போடுவாங்க!’ என  ஊகமாக ஒரு விடை மனதில் தோன்றும். ஏன் இது விநாயகருக்கு? 

Thursday, May 22, 2014

ஸ்ரீ விநாயகர் அவதாரம் ! ! ! (விநாயகர் புராணம் விளக்கும் அவதார ரகசியம்)
*விநாயகப் பெருமான், அனைத்தையும் உள்ளடக்கிய, அனைத்துக்கும் மூலமான பிரணவத்தின் பரிபூரண திருவடிவம். ஒரு முறை சிவபெருமானும், அம்பிகையும் திருக்கயிலை மலையில் அமைந்துள்ள பிரணவ மண்டபத்துக்கு எழுந்தருளும் பொழுது, திருச்சுவற்றில் உள்ள 'யானை வடிவ' சிற்பத்தில் இறைவன் - இறைவி' இருவரின் திருப்பார்வையும், ஒருசேரப் பதிந்தது.


Wednesday, May 21, 2014

திருவெண்காட்டில் தேய்பிறை அஷ்டமி ! ! ! (21.05.2014)


12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.


தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.

Monday, May 19, 2014

கணபதியை வழிபடும் முறைக்கு என்ன பெயர் தெரியுமா?


சமயப் பிரிவுகளுக்கு மதம் என்று பெயர். இந்து சமயத்தில் இன்று சைவம், வைணவம் என்று இரு பிரிவுகள் இருந்தாலும், ஒரு காலத்தில் இந்து சமயம் ஆறு பிரிவுகளாக இருந்தது. சிவ மதம்(சைவம்), விஷ்ணு மதம்(வைணவம்),என்பதோடு சக்தியை வழிபடுவோர்(சாக்தம்), முருகனை வழிபடுவோர்(கவுமாரம்), கணபதியை வழிபடுவோர்(கணாபத்யம்) சூரியனை வழிபடுவோர் (சவுரம்)என்று தனிப்பிரிவுகளாக இருந்தனர். கணபதியையே பரம்பொருளாகக் கருதி வழிபடும் முறையே கணாபத்யம். 

Thursday, May 15, 2014

ஔவையார் அருளிய விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம் ! ! !


விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது. இது தமிழ்ச் சைவர்களின் நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. தமிழர்கள் கைக்கொண்டொழுகிய வழிபாட்டு நெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த நூல் தமிழருக்கு அறிவிக்கும் அரிய செய்திகளை இக்கட்டுரை திரட்டித் தருகின்றது. இக்கருத்துக்கள் சைவசித்தாந்தப் பேராசிரியர் திரு இரா.வையாபுரியார் அவர்கள் விநாயகர் அகவலுக்கு எழுதியுள்ள பேருரையினின்றும் திரட்டப்பட்டது.

Tuesday, May 13, 2014

திருவெண்காட்டில் சித்திரா பௌர்ணமி !!! (14.05.2014)

                         

பிரசித்தி பெற்ற விழாவான சித்ரா பவுர்ணமி, நாளை விமரிசையாக நடைபெற உள்ளது. அதையொட்டி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை (14ம் தேதி) அதிகாலை 1.53 மணிக்கு தொடங்கி, 15ம் தேதி அதிகாலை 1.03 மணிக்கு முடிகிறது.

Saturday, May 10, 2014

கருவறையில் உள்ள விக்ரகங்களை கருங்கல்லால் செய்வது ஏன்?

                                       

கோயில் மூலஸ்தானத்தில் உள்ள விக்ரகங்களை உலோகத்தால் செய்யாமல் கருங்கல்லால் மட்டுமே செய்கிறார்கள். (ஒரு சில கோயில்களில் சுதை, மரத்தாலும் செய்யப்படுவது விதி விலக்கு). இதற்கு முக்கியமான காரணம் உண்டு.

Thursday, May 8, 2014

விநாயக பெருமான், ஜனக மகாராஜனுக்கு பிரம்மம் குறித்து ஏற்பட்டிருந்த ஆணவத்தை சுட்டிக் காட்டி, ஞானத்தை உபதேசித்த கதை ! ! !

இறைவனை உணர எளிய வழி!

பணம், பதவி, அதிகாரம் இம்முன்றும், எப்பேர்பட்ட மனிதருக்கும், நான் எனும், ஆணவத்தை கொடுத்து விடுகிறது. அதன் விளைவாக, நாம் செய்யும் ஆணவ செயல்கள், பாவ வினைகளை பரிசாக கொடுத்து, பிறவிதோறும் அப்பாவ கர்மத்தை அனுபவிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது. 

Monday, May 5, 2014

கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் எதற்காக நடத்துகிறார்கள் . . . ! ! !


இறைவன் ஜோதி வடிவானவன். பஞ்ச பூத சக்திகளையும் தன்னுள்ளே அடக்கி ஆள்பவன். தன்னுடைய சக்தியை நிலைபெறச்செய்து தன்னை நம்பி வருவோர்க்கெல்லாம் அருள் பாலிக்கிறான். அதற்காக, எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் இறை சக்தியை ஈர்த்து சேர்த்து மூலஸ்தானத்தில் நிலைப்படுத்த வழிபாட்டுத்தலமாக உருவாக்குகிறார்கள்.

Saturday, May 3, 2014

விநாயகப் பெருமானை வழிபட்டு தொடங்கும் செயல்கள் யாவும் இனிதே நிறைவுபெற . . . . . ! ! !


விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவதற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத்தின் பொருளைத் தொகுத்து வழங்கியுள்ளோம். 

இதை விநாயகரின் முன் பக்தியோடு சொல்லி வழிபடுவோருக்கு தொடங்கும் செயல்கள் யாவும் இனிதே நிறைவேறும்.

Thursday, May 1, 2014

திருவெண்காட்டில் புண்ணியம் சேர்க்கும் அட்சய திரிதியை ! ! ! (02.05.2014)


பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் நாளை திரிதியை அட்சய  திதி என்பர். சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதியை என சிறப்பித்துக் கூறுவதுடன் விழாவாகவும் கொண்டாடுகிறோம். சயம் என்றால் தேய்தல் என்று பொருள் அட்சய என்றால் வளர்வது. குறையாதது என்று பொருள்.