Thursday, September 27, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் சங்கடங்கள் நீக்கி சகல நலன்களும் தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம்!


ணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது.

Friday, September 21, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் வினைக்கேற்ப பலன்களை அள்ளித்தரும் சனீஸ்வரபகவானின் புரட்டாதிச் சனி விரதம் ! ! ! 22.09.2018 - 13.10.2018


புரட்டாதிச் சனி விரதம்” என அழைக்கப்படுவது புரட்டாதி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதமாகும்.

சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சம சனியென்றும்; 8 வது ராசியில் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும்; 12 வது இராசியிலும், சந்திர இராசியிலும், சந்திரனுக்கு 2 வது இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் இவ் மூன்று ராசிகளையும் கடக்க எடுக்கும் காலம் ஏழரை ஆண்டுகள் ஆகின்றன. அதனால் ஏழரைச் சனியென்று கூறுவர்.

Friday, September 14, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானுக்கு 1008 சங்காபிஷேகம் 11.09.2018 (மஹா கும்பாபிஷேக தினம் ) - படங்கள் இணைப்பு


மஹா கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு திருவெண்காடு புண்ணிய நாம சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானுக்கு 1008 சங்காபிஷேகமும் ஸ்ரீ காசிவிசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாத பெருமானுக்கும் ஸ்ரீ மஹாலட்சுமி, ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயணர், மகாவல்லி, கஜவல்லி சமேத செந்தில்நாதபெருமானுக்கும் , வைரவபெருமானுக்கும் 108 சங்காபிஷேகமும் ஏனைய பரிவார முர்த்திகளுக்கு ஸ்நமன கலச சங்காபிஷேகமும் இடம்பெற்றது. படங்கள் இணைப்பு

Tuesday, September 11, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் விக்கினங்களை தீரக்கவல்ல ஆவணிமாத விநாயகர் சதுர்த்தி வழிபாடு ! ! ! 12.09.2018 சிறப்பு கட்டுரை


சைவ மக்கள் கடைபிடிக்கும் விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி கடைபிடிக்கப்படுகின்றது. அன்றைய தினம் பயபக்தியோடு விநாயகரை வழிபட்டு , உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர்.

Thursday, September 6, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் சகல சம்பத்துகளும் அருளும் பிரதோச வழிபாடு ! ! ! 07.09.2018


சிவபெருமான் அபிஷேக பிரியர். சிவபெருமானுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

அருகம்புல் சாறு கொண்டு சிவனை அபிஷேகித்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

பசும் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.