சித்திவிநாயகப் பெருமான் மெய்யடியார்களே !
வெகுவிரைவில் (04.09.2016) திருவெண்காட்டு பெருமானுக்கு திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதனால் திருப்பணி வேலைகள் துரித கெதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
எனவே எங்கள் மண்டைதீவு பிள்ளையாருக்கு, எங்கள் சித்திவிநாயகருக்கு, எங்கள் வெண்காட்டு பெருமானுக்கு, எங்கள் குலதெய்வத்திற்கு, எங்கள் இஷ்ர தெய்வத்திற்கு, நாங்கள் எதாவது பொருள் உதவி செய்யவேண்டும் நிதி உதவி செய்யவேண்டும் என மனதார நினைத்து கொண்டிருக்கும் எம் பெருமான் மெய்யடியார்கள் விரைந்து இணைந்து சித்தி விநாயகப் பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம் .