Sunday, March 24, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் துன்பங்களில் இருந்து விடுதலை அடைய சங்கடஹர சதுர்த்தி ! ! ! 24.03.2019


ங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம். இன்று விநாயகருக்கு விரதம் அனுஷ்க்கும் முறையை பார்க்கலாம்..

சங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால் அறுத்தல் அதாவது விடுதலை செய்தல். சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம்.

Wednesday, March 20, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் சோதனைகளைத் தீர்த்தருளும் சோமவார பிரதோஷ விரதம் ! ! ! 18.03.2019


சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று விரதம் இருந்து பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள்.

சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம். திங்கட் கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். ‘சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி ஈசனை நினைத்து தவம் இருந்தான். சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், அவனது நோயை நீக்கியதுடன், நவக்கிரகங்களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார். அந்த நாள் சோமவாரம் ஆகும்.

Monday, March 4, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் சிவ கடாட்சம் கிட்டும் மகா சிவராத்திரி வழிபாடு ! ! ! 04.03.2019


சிவபெருமானுக்கு உரிய விரதங்களில் முக்கியமானவையாக எட்டு விரதங்கள் கந்தபுராணம் குறிப்பிடுகிறது. அவை சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், கல்யாண சுந்தர விரதம், சூல விரதம், ரிஷப விரதம், கேதார விரதம் ஆகியவையாகும். அவற்றுள் சிறப்பான விரதமாக மகா சிவராத்திரி உள்ளது. சிவ விரதங்கள் நிறைய இருந்தாலும் முக்கியமான சிவராத்திரி விரதம், முக்திப்பேறு அடைய உற்ற துணையாக விளங்குகிறது. செம்மையான மங்களம் தருபவன் என்ற அர்த்தம் கொண்ட சிவபெருமானை நினைத்து, மனமுருகி, உணவு தவிர்த்து, நாமம் சொல்லும் புண்ணிய தினம் சிவராத்திரி என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்தாகும்.

Sunday, March 3, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் துன்பங்கள் நீங்கி இன்பம் பெற பிரதோஷ வழிபாடு ! ! ! 03.03.2019

லகத்தில் தோன்றிய உயிர்கள் அனைத்துக்குமே இந்த பூமியில் வாழ சமஉரிமை உண்டு. அதே நேரத்தில் ஒரு உயிர் இறப்பதால் தான் மற்றொரு உயிர் வாழ முடிகிறது என்பதும் உண்மையாகும். அந்த வகையில் மனிதர்களாகிய நாம் நமது வாழ்க்கைக்கான தேவையின் போது நம்மை அறியாமல் நமது சக மனிதருக்கும் பிற உயிர்களுக்கும் தீங்கு செய்து விடுகிறோம். அதன் காரணமாக அந்த பிற உயிர்களின் மனவருத்தத்தால் நமக்கு சாபம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட சாபங்களை நீக்கும் “சிவனுக்குரிய” மந்திரம் தான் இது. 

பிரதோஷ மந்திரம் 

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே 
அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ