Saturday, January 31, 2015

திருவெண்காட்டில் பிரதோச வழிபாடு ! ! ! 01.02.2015


சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். 

Thursday, January 29, 2015

திருவெண்காட்டில் தை கிருத்திகை விரத அனுஸ்டானங்கள் . . . 29.01.2015


உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் தைக்கிருத்திகையும் விழாவும் ஒன்று.

Thursday, January 22, 2015

திருவெண்காட்டில் விநாயகர் சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் 23 -01 - 2015 சிறப்புக்கட்டுரை


விநாயக சதுர்த்தி வரலாறு!

பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.

Monday, January 19, 2015

திருவெண்காட்டில் தை அமாவாசை விரத அனுஸ்டானங்கள் 20.01.2015 (சிறப்புக் கட்டுரை)


தைஅமாவாசை மிகவும் புனிதமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர்.

Saturday, January 17, 2015

திருவெண்காட்டில் சகல சௌபாக்கியங்களும் தரவல்ல பிரதோஷ வழிபாடு ! ! ! 18.01.2015


இறை வழிபாடு குறைகளை நீக்கி நிறைவு தரும். முக்கியமாக புண்ணிய நாட்களில் இறைவனை வழிபடுவது பெரும் பயன் தரும்.காலத்திற்கு அதிக வலிமையுண்டு. காலமறிந்து ஒரு தர்மம் செய்தால் ஞால முழுவதும் நமது வசமாகும். காலத்தில் செய்வதற்கு அதிக பயன கிட்டும். “பாலோடாயினும் காலமறிந்து உண்” என்பது பழமொழி.

Thursday, January 15, 2015

திருவெண்காட்டில் தைப்பொங்கல் திருநாள் வழிபாடு 15.01.2015


தைப்பொங்கல் 

தைப்பொங்கல் தை மாதம் தமிழ் முதலாம் திகதி இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும்  உலக நாடுகள் அனைத்திலும்  தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

Monday, January 12, 2015

விநாயகப் பெருமானின் ஆறுபடைவீடுகள் ! ! !

முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போல விநாயகப் பெருமானுக்கம் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாட்டு பலன்கள் வருமாறு :-

Friday, January 9, 2015

திருவெண்காட்டில் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைத் தரவல்ல சங்கடஹர சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் 09-01-2015


"மூஷிக வாஹன மோதகஹஸ்த
சாமரகர்ண விளம்பித சூத்ர
வாமனரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே!''


விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைப் பெறலாம் எனக் கூறப்படுவதுண்டு."ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

Tuesday, January 6, 2015

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் (05.01.2015) படங்கள் இணைப்பு


மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 05.01.2015 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.

Friday, January 2, 2015

திருவெண்காட்டில் துன்பங்கள் நீக்கி சகல காரிய சித்தி தரும் பிரதோஷ வழிபாடு ! ! ! 02.01.2015சிவபெருமானை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை, அதிலும் சிறந்தது சோமவாரம், அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி, அதனினும் சிறந்தது பிரதோஷம், பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். நோய் தீரவும், ஏழ்மை ஒழியவும், துயரங்கள் விலகவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில் சொர்க்க வாசல் திறப்பு 01.01.2015 ! ! !


திருச்சி , ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது .

ஆங்கில புத்தாண்டு தினத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறக்கப் பட்டதால் லட்சக்கணக்கான பத்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர் .