Friday, January 2, 2015

வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில் சொர்க்க வாசல் திறப்பு 01.01.2015 ! ! !


திருச்சி , ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது .

ஆங்கில புத்தாண்டு தினத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறக்கப் பட்டதால் லட்சக்கணக்கான பத்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர் .


'பூலோக வைகுண்டம் ' என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது . பன்னிரு ஆழ்வார்களின் தலைவராகிய ' நம்மாழ்வார் ' மோட்சம் என்று சொல்லப்படுகிற வைகுண்ட பதவி அடைந்ததே வைகுண்ட ஏகாதசி நாளின் சிறப்பாகும்.

வைகுண்ட ஏகாதசி  விழாவினை முன்னிட்டு இன்று அதிகாலை 3.45 மணிக்கு இரத்தின அங்கி அலங்காரத்தில் பாண்டியன் கொண்டாய் , கிளி மாலை அணிந்து நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டு பரமபத வாசலை கடந்து திருக்கொட்டகையில் பிரவேசித்தார்.


அதன்பின்னர் திருமாமணி ஆஸ்த்தான மண்டபத்தை அடைந்தார்  நம்பெருமாள் . பக்தர்கள் லட்சக்கணக்கில் நம்பெருமாளை தரிசனம் செய்தனர் .சொர்க்க வாசல் திறப்பு இன்று நடைபெற்ற பின்னர் இதற்கு அடுத்ததாக வரும் ராப்பத்து திருவிழா நாட்களில் மதியம் 2 மணி முதல் பரமபத வாசல் தினமும் திறந்திருக்கும் .ராப்பத்தின் எட்டாம் நாளான ஜனவரி 8-ம தேதியன்று 'வேடுபறி' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'