Friday, January 2, 2015

திருவெண்காட்டில் துன்பங்கள் நீக்கி சகல காரிய சித்தி தரும் பிரதோஷ வழிபாடு ! ! ! 02.01.2015



சிவபெருமானை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை, அதிலும் சிறந்தது சோமவாரம், அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி, அதனினும் சிறந்தது பிரதோஷம், பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். நோய் தீரவும், ஏழ்மை ஒழியவும், துயரங்கள் விலகவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.


இவ்விரதத்தை கடைபிடிக்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வரும் சனிப் பிரதோச நாளில் விரத தொடங்குதல் சிறப்பு பிரதோச விரதம் கடைபிடிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அஸ்தமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் உணவருந்த வேண்டும்.

சிவகுடும்பம் திருவெண்காடு மண்டைதீவு 


திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு  ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை  அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான்  ஸ்ரீ பாலமுருகன்  ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் 

ஆலகால விஷத்தால் மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் காத்த வேளையே பிரதோஷ காலம். வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாதம் இருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷ காலம் எனப்படும். குறிப்பாக 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலம்.


திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை  ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி

பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். 


காலையில் எழுந்து நீராடிவிட்டு,சிவன் படத்திற்கு அகல் விளக்கு ஏற்றவேண்டும்.சமயலறையில் இருக்கும் அடுப்பில் அரிசி மாவில் கோலம் இடவேண்டும்.காலையில் இருந்து உணவை தவிர்க்கவேண்டும்.பால் உணவும்(டீ,காபி) சாப்பிடகூடாது. பழங்கள்,இளநீர் சாப்பிடலாம்.சைவ உணவுகளை சமைத்துவிட்டு மாலையில்அருகில் இருக்கும் சிவ தலத்தில் நந்திதேவரையும்,சிவனையும் வழிபடவேண்டும்.

நம் இல்லத்தில் சாமி படங்களுக்கு சாம்பிராணி போட்டுவிட்டு,மூன்று தலைவாழை இலையில் உணவு பறிமாறி,சிறிது உணவை காகத்திற்கு வைத்துவிட்டு,இரு இலை உணவை இல்லாத்தாளும்,இல்லரசனும் சாப்பிடவேண்டும்,ஒரு இலை உணவை ஏழைகளுக்கோ,சந்நியாசிகளுக்கோ கொடுக்கலாம்.


இந்த விரதம் கடைபிடிப்பதால் திருமணதடை அகலும்,குழந்தை பேறு கிடைக்கும்.சகல செல்வங்களுடன் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'