Thursday, August 25, 2016

யாழ் - மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விஞ்ஞாபனம் - 04.09.2016


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா அழைப்பு  வீடியோ 04.09.2016



Saturday, August 13, 2016

மஹா கும்பாபிஷேகம் பற்றிய அரிய தகவல்கள் !!!


கோவில் கும்பாபிஷேகம் அதிகம் பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் என்று பலருக்கும் தெரியாது.

Thursday, August 11, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் உயர்வான வாழ்க்கை தரும் ஸ்ரீவரலட்சுமி விரதம் ! ! ! 12.08.2016


ஆடிமாதம் பிறந்தாலே பண்டிகைகளும் விரதங்களும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரும் என்பது எல்லோரும் அறிந்ததே. பதினெட்டாம் பெருக்கு முடிந்து ஆகஸ்டு 4ம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இல்லந்தோறும் திருமகளை வரவேற்று நோன்பிருந்து பூஜை செய்து மகிழ்கிறோம். இந்நாளை வரலட்சுமி விரதம் அல்லது வரலட்சுமி நோன்பு என்கிறோம். திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் இதை வரலட்சுமி பண்டிகை என்றும் கூறலாம்.

Saturday, August 6, 2016

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா அழைப்பு 04.09.2016



திருவெண்காட்டில் வேதியர்கள் புடைசூழ வேதாகமங்கள் ஒலிக்க மங்கள வாத்தியங்கள் முழங்க பக்த கோடிகளின் அரோகரா கோசத்துடன் திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமானுக்கு மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்திவிழா 04.092016 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருப்பதனால் சித்திவிநாயகப்பெருமான் மெய்யடியார்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு அவனது திருவருள் மழையில் நனைந்து பேரானந்த பெருவாழ்வு வாழ்வீர்களாக.

சுபம்.
" எல்லாம் சித்திவிநாயகன் கிருபை "
அன்பே சிவம்

இங்ஙனம்
ஆலய தர்மகர்த்தாக்கள்.

Thursday, August 4, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் அகிலாண்ட கோடி அன்னைக்கு ஆடிப்புரம் ! ! ! 05.08.2016


டிப்புரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.

அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்புரம்.

Monday, August 1, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் சுபிட்சம் தரும் ஆடி அமாவாசை விரத அனுஸ்டானங்கள் ! ! ! 02.08.2016

நூறாண்டுகளுக்கு பிறகு நடைபெறும் அதிசயம் நாளை ஒரே நாளில் 3 முக்கிய நிகழ்வு
*ஆடிப்பெருக்கு - ஆடி அமாவாசை-குருப்பெயர்ச்சி*
*மங்கலம் தரும் ஆடிப்பெருக்கு.*
*மூதாதையர்கள் அருளைப் பெற உதவும் ஆடி அமாவாசை.*
*கோடி நன்மை தரும் குருப்பெயர்ச்சி.*
இந்த 3 முக்கிய நிகழ்வுகளும் ஒரு சேர அமைந்துள்ள அதிசய திருவிழா நூறாண்டுகளுக்கு பிறகு நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.