திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா அழைப்பு 04.09.2016
திருவெண்காட்டில் வேதியர்கள் புடைசூழ வேதாகமங்கள் ஒலிக்க மங்கள வாத்தியங்கள் முழங்க பக்த கோடிகளின் அரோகரா கோசத்துடன் திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமானுக்கு மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்திவிழா 04.09.2016 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருப்பதனால் சித்திவிநாயகப்பெருமான் மெய்யடியார்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு அவனது திருவருள் மழையில் நனைந்து பேரானந்த பெருவாழ்வு வாழ்வீர்களாக.
சுபம்.
" எல்லாம் சித்திவிநாயகன் கிருபை "
அன்பே சிவம்
இங்ஙனம்
திரு பொ.வி.திருநாவுக்கரசு
திரு இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)
ஆலய தர்மகர்த்தாக்கள்.
மண்டைதீவு - திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை