Thursday, March 26, 2015

இறைவனுடைய திருநாமங்களை உள்ளம் உருகி, இசையுடன் சேர்த்து பாடுவதே நாம சங்கீர்த்தனம். அதை விளக்கும் கதை இது…


மத்திய தேசத்தை, சூரசேனர் என்னும் அரசன் ஆண்டு வந்தார். விநாயகருடைய பக்தரான அவரிடம், ‘விநாயகருக்கு கோவில்கள் எழுப்பி, வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தி வந்தால், இம்மைக்கு மட்டுமல்ல, மறுமைக்கும் பலன் உண்டு…’ என்று கூறினார் வசிஷ்டர்.

Monday, March 23, 2015

திருவெண்காட்டில் சக்திகணபதி சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் ! ! ! (23.03.2015)


விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். 

அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். 

Thursday, March 19, 2015

திருவெண்காட்டில் போதாயன அமாவாசை விரத அனுஸ்டானங்கள் ! ! ! 19.03.2015


போதாயனர் என்று ஓர் மகரிஷி. விந்திய மலைக்கு தெற்கில் வாழ்ந்ததாக புஸ்தகங்களில் காணப்படுகிறது இவரது வம்சத்தைச் சேர்த்தவர்களே போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கல் என்று அழைக்கப்படுகின்றனர்.

Tuesday, March 17, 2015

திருவெண்காட்டில் பிரதோச வழிபாடு ! ! ! 18.03.2015 பிரதோஷ விரதத்தை முதன் முதலில் எந்த மாதத்தில் ஆரம்பிக்க வேண்டும் ! ! !


பிரதோஷ விரதம் இருக்க விரும்புகிறவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஒன்றில் வரும், சனிக்கிழமை பிரதோஷ நாளாக பார்த்து இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் நீராடி காலைக் கடன்களை முடிக்க வேண்டும். 

Thursday, March 12, 2015

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான திருப்பணியின் நான்காம் தள கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் 12-03-2015 (படங்கள் இணைப்பு)


வெகுவிரைவில் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவை  காண இருக்கும்  திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

Monday, March 9, 2015

திருவெண்காட்டில் "சங்கடஹர சதுர்த்தி" விரத அனுஸ்டானங்கள் ! ! ! 09.03.2015


நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய்க்கு, விநாயகரை வழிபடும் முறைகளை பரத்வாஜ் முனிவர் சொல்லிக் கொடுத்தார். அதன்படி செவ்வாய், விநாயகரை நோக்கி கடும் தவம் இருந்தார். பக்திக்கு மகிழ்ந்த விநாயகர் அவர் முன் தோன்றி, செவ்வாய் நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்கும் வரம் கொடுத்தார். 

Thursday, March 5, 2015

திருவெண்காட்டில் மகத்துவம் மிக்க மாசிமக விரத அனுஸ்டானங்கள் ! ! ! 04.03.2015


மாசி மாதம் என்றதும் நம் நினைவுக்கு வருவது மக நட்சத்திரம்தான். இந்த மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடினால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும். உயர்ந்தவன்- தாழ்ந்தவன், ஏழை- பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் நீராடலாம். திருமணமானவர்கள் தங்கள் மனைவியுடன் நீராட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.