Saturday, December 31, 2016

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .


அன்புடையீர்,

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . . .

(01.01.2017) இன்று துவங்கி இருக்கும் இந்த ஆங்கிலப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் அனைத்து நலன்களையும், வளங்களையும் வாரி வழங்க வேண்டும்.

மன அமைதியும், ஆனந்தமும் என்றென்றும் நிலவ வேண்டும். எடுத்த காரியம் யாவிலும் வெற்றியே கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல மண்டைதீவு - திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்கப் பிரார்த்தித்திக்கின்றோம்.

Monday, December 26, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் ஒளிமயமான வாழ்வு தரும் பிரதோஷ வழிபாடு ! ! ! 26.12.2016


பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம். 

Saturday, December 17, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் நமக்கு வரும் தடைகள் அனைத்தையும் தீர்க்க வல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 17.12.2016


ன்று (17-12-16 சங்கடஹர சதுர்த்தி) எந்த ஒரு சுபகாரியம் துவங்கினாலும் சிறிது மஞ்சள் பிடித்து வைத்து அனைவரும் முதலில் பூஜிப்பது சங்கடம் தீர்க்கும் சங்கரன் புதல்வன் விநாயகப் பெருமான் ஆவார். காரணம் விநாயகப் பெருமானை பூஜித்து எந்த சுபகாரியம் துவங்கினாலும் தடங்கள் ஏதுமின்றி இனிதே நடைபெறும் என்பதால்...

Wednesday, December 14, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் விநாயகர் பெருங்கதை விரத அனுஸ்டானங்கள் ! 14.12.2016 - 03.01.2017


விநாயக ஷஷ்டி விரதம் (பெருங்கதை விரதம் ) 14.12.2016 புதன்கிழமை தொடக்கம் 03.01.2017 செவ்வாய்க்கிழமை கஜமுகசங்காரத்துடன் நிறைவடையும்.

திருக்கார்த்திகை நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டு வரவேண்டும். 

Monday, December 12, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் புற இருளை நீக்கி திருவருள் பெருகும் திருக்கார்த்திகை‬ தீபத் திருவிழா ! ! ! 12.12.2016


இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.

வீட்டில் உள்ள விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்குவதாம். சொல்லின் அகத்து நின்று விளக்குவதாய், ஒளியுடைய தாய், பல இடங்களையும் விளக்குவதாய்ப் பல சமயத்தாரும் தம்மை அறியாமலே காண நிற்பதாய் ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை நல்குவது திருவைந்தெழுத்து மந்திரமே.

Saturday, December 10, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் கோடி அஸ்வமேதயாகம் செய்த பலன் தரும் பிரதோஷ விரத வழிபாடு ! ! ! 11.12.2016


ரு காலத்தில் சாதாரண மானுடர்களைப் போலவே தேவர்களும், அசுரர்களும் - பிணி, மூப்பு, சாக்காடு - இவற்றால் நொந்து நூலாகிப் போனார்கள். அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு இடையில் அடிக்கடி ஏற்படும் அடிதடி, சண்டை சச்சரவுகளில் பெருத்த சேதாரம் வேறு. எனவே இவை நீங்குவதற்கு ஒரு வழியைத் தேடி, நேராக நான்முகனிடம் சென்றனர்.

Friday, December 2, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் சகல சௌபாக்கியங்களும் தரவல்ல விநாயகர் சதுர்த்தி ! ! ! 03.12.2016.


திருக்கயிலை மலையில் சிவபெருமான் - அம்பிகை இருவரின் திருப்பார்வை கடாட்சத்தில் இருந்து தோன்றி அருளியவர் பிரணவ சுவரூபரான ஸ்ரீவிநாயகக் கடவுள்.

'விநாயகச் சதுர்த்தி' என்பது விநாயகக் கடவுளின் தோற்றத்தைக் குறிக்க வந்தது அன்று. இறைவன் தோற்றம் - மறைவு இவைகளைக் கடந்த ஆதி காரணன். ஸ்ரீவிநாயகர் சிவப்பரம்பொருளின் திருக்குமாரர் என்று குறிப்பது உபசார மார்கம் கருதியே.