இன்று (17-12-16 சங்கடஹர சதுர்த்தி) எந்த ஒரு சுபகாரியம் துவங்கினாலும் சிறிது மஞ்சள் பிடித்து வைத்து அனைவரும் முதலில் பூஜிப்பது சங்கடம் தீர்க்கும் சங்கரன் புதல்வன் விநாயகப் பெருமான் ஆவார். காரணம் விநாயகப் பெருமானை பூஜித்து எந்த சுபகாரியம் துவங்கினாலும் தடங்கள் ஏதுமின்றி இனிதே நடைபெறும் என்பதால்...
அவ்வாறு சக்தி பெற்ற சக்தி மைந்தரை தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த விநாயகர் ஸ்லோகத்தை சொல்லி பூஜித்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் எந்த செயலை செய்வதாலும் தங்குதடையின்றி இனிதே நடக்கும்.
* ஸ்லோகம்:
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
* பொருள்:
யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன்...
கணநாயகா போற்றி! போற்றி!
"அருள்மிகு திருவெண்காடு சித்தி விநாயகப் பெருமானின் திருவருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயத்திற்க்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"
ஓம் கம் கணபதயே நமஹ...!!
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
இன்பமே சூழ்க ... !
எல்லோரும் வாழ்க . . . !
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'