Thursday, August 31, 2017

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோ இணைப்பு ! ! ! 27.08.2017

ண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க 27.08.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. (வீடியோ இணைப்பு)

அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க மண்டைதீவு திருவெண்காடனுக்கு கொடியேற்றம் ! ! ! 27.08.2017 (படங்கள் இணைப்பு)


ண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சித்தி விநாயகப்பெருமானின் திருவருளைப்பெறுவதற்கான பெருந்திரளா பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தனர். படங்கள் இணைப்பு

Saturday, August 26, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் ஆவணி விநாயகர் சதுர்த்தி ! ! ! 25.08.2017


வணி சதுர்த்தி என்பது ஆவணி மாதத்துச் சுக்கில பட்சத்தில் வரும் சதுர்த்தியில் (வளர்பிறை நான்காம் நாள்) அநுட்டிக்கப்படும் விநாயக சதுர்த்தி விரதமாகும்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே.

Saturday, August 19, 2017

திருவெண்காட்டில் உலகிலுள்ள அனைத்து ஐீவராசிகளும் உய்வுபெற சனி மகா பிரதோஷ வழிபாடு ! ! ! 19.08.2017


னி மஹா பிரதோஷ விரதமிருந்து நமது மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் அகிலாணடகோடி பிரம்மாண்ட நாயகனாய், கருணைக்கடலாய் எழுந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தியையும் அருள்மிகு ஸ்ரீ காசிவிசாலாட்சி அம்பாள் உடனுறை ஸ்ரீ காசிவிஸ்வநாத மூர்தியையும் வணங்கி ஐந்து வருடங்கள் சிவ வழிபாடு செய்த பலன்களை பெறலாம்...

Monday, August 14, 2017

வரலாற்றுப் பிரசித்திபெற்ற மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான ஏவிளம்பி வருட மகோற்சவ விஞ்ஞாபனம். - 2017


வானளாவ உயர்ந்த அழகான இராஜகோபுரத்துடன் மண்டைதீவு திருவெண்காட்டில் அமைந்திருக்கின்ற இந்த சித்தி விநாயகப்பெருமான் ஆலயம் மிகவும் கீர்த்தி பெற்ற மூர்த்தி இருக்கும் புண்ணிய சேஷத்திரமாகும்.

Thursday, August 10, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி ! ! ! 10.08.2017



ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

Friday, August 4, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருகும் வரலட்சுமி விரதம் ! ! ! 04.08.2017

லம் தரும் சொல் நாராயணா' என்பர். அதுபோல் மங்கலம் தரும் சொல் மகாலட்சுமி ஆகும். எங்கு மகாலட்சுமி இருக்கிறாளோ அந்த இடம் செல்வச் செழிப்பு பெறும். மகாலட்சுமியின் திருவருள் பார்வையில் படுவோர் அனைவரும் அனைத்து நலனும் பெற்றுச் சிறப்பாக வாழ்வார்கள். "அலைமகள்' என்று சொல்லப்படும் லட்சுமி தேவியைப் போற்றும் வகையில் பெண்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் விரதங்களில் முதன்மையானது வரலட்சுமி விரதம்.