Monday, August 12, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் சோதனைகளை போக்கும் சோமவார பிரதோஷ வழிபாடு ! ! ! 12.08.2019


தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில், அந்த விடமுண்ட கண்டனை வழிபட்டால், அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள். நம்பிக்கையோடு ’நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்; தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும். 

Saturday, August 10, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான விகாரி வருட மஹாற்சவ பெருவிழா - 2019


தெட்சணகைலாயம், சிவபூமி எனப் போற்றப்படும் ஈழமணி திருநாட்டில் தமிழர் வாழ்வோடும் வரலாற்றோடும் இரண்டறக் கலந்து , அடியவர்களுக்கு வேண்டுவனவற்றை அள்ளிக் கொடுக்கும் முழுமுதற் கடவுளின் கோயிலாக விளங்குவது மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் திருக்கோயில் ஆகும் .

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் பௌர்ணமியை தீர்த்தமாக கொண்டு கொடியேறி தொடர்ந்து 10 நாட்கள் மகோற்சவ பெருவிழாக்கள் நடைபெற எம் பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது.

Wednesday, August 7, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் வரலட்சுமி விரத உற்சவ அழைப்பிதழ் ! ! ! 09.08.2019




வரலட்சுமி விரதம்
********************
ஆடிமாதம் பிறந்தாலே பண்டிகைகளும் விரதங்களும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரும் என்பது எல்லோரும் அறிந்ததே. பதினெட்டாம் பெருக்கு முடிந்து ஆகஸ்டு 9 ம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இல்லந்தோறும் திருமகளை வரவேற்று நோன்பிருந்து பூஜை செய்து மகிழ்கிறோம். இந்நாளை வரலட்சுமி விரதம் அல்லது வரலட்சுமி நோன்பு என்கிறோம். திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் இதை வரலட்சுமி பண்டிகை என்றும் கூறலாம்.

Saturday, August 3, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு ஆடிப்பூரம் ! ! ! 03.08.2019


ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் விழாக்களும், கொண்டாட்டங்களும் களை கட்டியிருக்கும். அதே ஆடி மாதம் பெருமாள் கோவில்களில் சூடித்தந்த சுடர்க்கொடியான ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகளும், தேரோட்டமும் நடைபெறுவதும் வழக்கம்.

மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து, 'சகலமும் அவனே" என அவனுடன் ஐக்கியமானவர். ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண்டாள்.