Tuesday, June 30, 2015

“2015 குரு பெயர்ச்சி” பன்னிரண்டு இராசிக்காரர்க்கும் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் முழுமையான விபரம்.


ஜோதிடத்தில் பொதுவாக குருவும் சுக்கிரனும் சுப கிரகங்களாக கூறப்படுகிறார்கள். வசதி வாய்ப்புடன் வாழ்பவர்களை பார்த்து சுக்கிர திசை அடிக்கிறது என்பார்கள்.


சுக்கிரன் தனி மனித செல்வத்திற்க்கு காரகர் குரு பொது செல்வத்திற்க்கு காரகர் எனவே குரு பெயர்ச்சி எல்லோராலும் எதிர்பார்க்கும் தன்மையுடையதாகிறது. குரு பகவான் கொடுக்கும் பலன்களைத் தெரிந்து கொள்வோம்.

Monday, June 29, 2015

திருவெண்காட்டில் சகல தோஷங்களும் நீக்கி நலம் தரவல்ல பிரதோச வழிபாடு ! ! ! 29.06.2015


ரவும்+பகலும் சந்திக்கின்ற காலத்தை "உஷத் காலம்'' என்றும், பகற்பொழுதின் முகம் என்றும், விடியற்காலம் என்றும் கூறுவர். இக்காலத்தின் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய "உஷாதேவி'' எனவேதான இக்காலத்தை அவள் பெயரால் "உஷத் காலம்'' என்று அழைக்கப்படுகிறது. அதே போல, பகலும்+இரவும் சந்திக்கின்ற காலத்தை "பிரத் உஷத் காலம்'' என்றும், இரவுப் பொழுதின் முகம் என்றும், சந்தியா காலம் என்றும் கூறுவர்.

Wednesday, June 24, 2015

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற ஆனி உத்தர திருமஞ்சன மஹாபிஷேகம் ( 24.06.2015 ) படங்கள் இணைப்பு

 

னி உத்தர திருமஞ்சன தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 24.06.2015 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.

Tuesday, June 23, 2015

திருவெண்காட்டில் ஆனந்த நடராஐமூர்த்தி சமேத சிவகாமி அம்பாளுக்கு ஆனி உத்தர திருமஞ்சன மகாபிஷேகம் 24.06.2015 ! ! !



சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.

Monday, June 22, 2015

திருவெண்காட்டில் ஆனந்தம் தரவல்ல ஆனி மாத குமார சஷ்டி விரத அனுஸ்டானங்கள் ! ! ! 22.06.2015


முருகனைத்தியானித்து வழிபடப் பல விரதங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமான விரதம் குமார சஷ்டி விரதம். ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் எனப்படும்.

Saturday, June 20, 2015

திருவெண்காட்டில் இஷ்ட சித்திகள் தரவல்ல விநாயகர் சதுர்த்தி ! ! ! 20.06.2015


விநாயக விரதங்களுள் மிக விசேஷமானது சதுர்த்தி விரதம். இந்துக்கள் யாவரும் விரும்பி அநுஷ்டிக்கும் விரதம். விநாயகர் ஆலயங்களில் சிறப்பாகவும், ஏனைய ஆலயங்களில் பொதுவாகவும் இவ் விரதநாளிலே விசேஷ அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நிகழ்கின்றன.

Thursday, June 18, 2015

ஸ்ரீ விநாயக பெருமான் தன் துதிக்கையால் ஔவை பிராட்டியை கயிலை மலையில் சேர்ப்பிக்கும் திருக்காட்சி ! ! !


ரு சமயம், ஔவையார் ஆனைமுகக் கடவுளைப் பூஜித்துக் கொண்டு இருந்தார். அவ்வேளையில், சுந்தர மூர்த்தி நாயனார் ஆகாய மார்கமாக கயிலை மலைக்கு ஏகுவதைக் கண்னுற்றார். சுந்தரர், தன் அவதார நோக்கம் நிறைவுற்றதால், சிவபெருமான் ஏவலால் தம்மை அழைப்பிக்கும் பொருட்டு வந்த வெள்ளை யானையின் மீது ஆரோகணித்து, கயிலையம் பதிக்கு சென்று கொண்டிருந்தார்.

Friday, June 12, 2015

திருவெண்காட்டில் செல்வம் பெருகும் பிரதோச வழிபாடு ! ! ! 13.06.2015




-  பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் முறை

பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம். 

Monday, June 8, 2015

விநாயகப் பெருமானின் திருக்கல்யாண வரலாறு ! ! !

ந்து கடவுளான விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். எந்த கோயில்களுக்கு சென்றாலும் அங்கு விநாயகரை முதல் கடவுளாக வைத்திருப்பார்கள், அதுமட்டுமா அனைத்து தெருக்களிலும் விநாயர் சிலையை வைத்து வணங்குவார்கள்.

Friday, June 5, 2015

திருவெண்காட்டில் ஆனந்தமும் , ஆரோக்கியமும் தரவல்ல சங்கடஹர சதுர்த்தி வழிபாடு ! ! ! 05.06.2015


“ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”

முழுமுதற் கடவுளாம் விநாயகர் ஐந்து கரங்களுடன் அபயம் அளிப்பவர்.

விநாயகரின் தோற்றமே விசித்திரமானது எனலாம். அதனையே இந்தப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

Monday, June 1, 2015

திருவெண்காட்டில் வைகாசி விசாக திருநாள் ! ! ! (01.06.2015)


வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம்.