Monday, June 25, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் பல கோடி புண்ணியத்தை தரவல்ல பிரதோஷ வழிபாடு ! ! ! 25.06.2018


சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது. 

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

Friday, June 22, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற ஆனி உத்தர திருமஞ்சனம் ! ! ! (21.06.2018) படங்கள் இணைப்பு


ஆனி உத்தர திருமஞ்சனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபை பொன்னம்பலத்தில் வீற்றிருந்து ஆனந்த திருநடனம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 21.06.2018  அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.

Thursday, June 21, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்த புவனத்தில் ஆனந்தவாழ்வு தரும் இரத்தினசபாபதிக்கு ஆனி உத்தர திருமஞ்சனம் ! ! ! 21.06.2018


திருக்கயிலாயமே திருவெண்காடு.. திருவெண்காடே திருக்கயிலாயம் என்று கயிலாயத்துக்கு இணையாகப் போற்றப்படும் மண்டைதீவு திருவெண்காடில் நடைபெறும் ஆனி உத்தர திருமஞ்சன நன்நாளில், திருச்சிற்றம்பலத்தானை தரிசிப்போம், வணங்கிப் பிரார்த்திப்போம்.

முன்பொரு சமயம்... பிரம்ம தேவர், அந்தர்வேதி எனும் சத்தியலோகத்தில் மிகப் பெரிய யாகம் ஒன்று செய்ய முனைந்த வேளையில், தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீக்ஷிதர்கள் மூவாயிரம் பேரையும் அழைக்க, தில்லைக்கு வந்து அவர்களை வரும்படி வேண்டி கேட்டுக் கொண்டார்.

அப்போது, நாங்கள் பகல் போஜனத்திற்கே திரும்பி வந்துவிடவேண்டும். அதற்கு வேண்டிய சௌகர்யம் செய்து தருவதாக இருந்தால், நாங்கள் அனைவரும் வருகிறோம் என பிரம்மாவிடம் உறுதி கேட்டுவிட்டு, உறுதி தந்தனர்.

Friday, June 15, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் சௌபாக்கியம் அருளும் சதுர்த்தி ! ! ! 16.06.2018


* விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும்.