“ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”
முழுமுதற் கடவுளாம் விநாயகர் ஐந்து கரங்களுடன் அபயம் அளிப்பவர்.
ஐந்து கரங்களில் வலப்புறக் கையில் ஒன்று, பக்தர்களுக்கு அபயம் அளிப்பதாக காட்சி தருகிறது. மற்றொரு வலப்புறக் கையில் அங்குசம் உள்ளது. இடப்புறக் கைகளில் ஒன்றில் பாசக் கயிறும், மற்றொரு இடக்கையில் மோதகமும் (கொழுக்கட்டை) வைத்தபடி விநாயகர் காட்சி தருகிறார். ஐந்தாவது கையான துதிக்கையில் அமுத கலசம் ஏந்தி கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
கொடியவர்களை ஒழிக்கும் ஆயுதமாக அங்குசத்தையும், தம்மை வழிபடும் அடியவர்களுக்குத் துன்பம் தருவோரை தமது பாசக்கயிற்றால் அழிக்கவே அதனைக் கையில் ஏந்தியுள்ளார். மற்றொரு கையில் அவருக்குப் பிடித்தமான கொழுக்கட்டையை வைத்துள்ளார். துதிக்கையில் வைத்திருப்பது அமுதக் கலசம்.
அதாவது விநாயகரை மனமுருக வேண்டி வழிபடுவோருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் அமுதம் போன்ற திகட்டாத வாழ்வு கிடைக்கும் என்பதையே இது உணர்த்துகிறது.
திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு - இலங்கை
"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்."
ஆனை முகத்தனை! யானை போன்ற முகத்தைக் கொண்டிருப்பவர். இளம்பிறை (முழு நிலவின் ஒரு பகுதி – அரைவட்டம்) போன்ற வயிற்றைக் கொண்டிருப்பவர். நந்தி தேவரின் மகனாகப் பட்டவரை, ஞானமாகிய மிகச் சிறந்த அறிவு படைத்தவரை, புந்தியில் – நம் மனத்தில் என்றும் நினைத்து வணங்குவோமாக! – என்பதே அந்தப் பாடலின் பொருளாகும்.
ஆனை முகத்தனை! யானை போன்ற முகத்தைக் கொண்டிருப்பவர். இளம்பிறை (முழு நிலவின் ஒரு பகுதி – அரைவட்டம்) போன்ற வயிற்றைக் கொண்டிருப்பவர். நந்தி தேவரின் மகனாகப் பட்டவரை, ஞானமாகிய மிகச் சிறந்த அறிவு படைத்தவரை, புந்தியில் – நம் மனத்தில் என்றும் நினைத்து வணங்குவோமாக! – என்பதே அந்தப் பாடலின் பொருளாகும்.
விநாயகரை வழிபடுவோருக்கு வினைகள் ஏதும் வராது. ஐந்து கரத்தானை வணங்குவோருக்கு ஞானம் பெருகி, நலம் பல பெருகும்.
முகத்தில் ஒரு கையை (துதிக்கை) கொண்டிருப்பதால், விநாயகரை ஒருகை முகன் என்றும் கூறுவபுதியதாகத் தொடங்கும் எந்தவொரு செயலும் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு, மூல முதற் கடவுளான விநாயகரை வழிபடுவது நமது மக்களிடையே தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.
நம்பியோரை கைவிடாத அந்தத் தும்பிக்கையானுக்கு உகந்த நாள் விநாயகர் சதுர்த்தி. ஆண்டு தோரும் ஆவணி மாதம் சுக்லபக்ஷ சதுர்த்தி திதியை (தினத்தை) விநாயகர் சதுர்த்தியாக வழிபடுகிறோம்.
பிள்ளையார் சுழி போடுவது ஏன்?
கணபதியை துதித்து ஒரு செயலைத் தொடங்கினால் தொட்டது துலங்கும் என்பது ஐதீகம். இதையொட்டியே பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கம் நம்மிடம் உருவானது.
உலகில் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவரே விநாயகப் பெருமான்தான். வேத வியாசர் மகாபாரதத்தை சொல்லச்சொல்ல தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதியவர் பிள்ளையார். அதற்காகவே நாமும் பிள்ளையார் சுழி போட்டு எழுதத்தொடங்குகிறோம்.
எலி வாகனத்தின் தத்துவம்:
கனத்த உருவம் கொண்ட பிள்ளையார் சிறிய உருவம் உடைய மூஞ்சுறுவை, அதாவது எலியை வாகனமாகக் கொண்டிருப்பது முரண்பாடாகவும் வினோதமாகவும் இருக்கலாம். ஆனால் இதில் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது.
யானை முகமும், பெருத்த உடலும் கொண்ட விநாயகருக்கு சின்னஞ்சிரு மூஞ்சூறு வாகனமாக இருப்பது போல், நம் கண்ணுக்கு புலப்படாத மூச்சுக் காற்றானது ‘வினை’ எனப்படும் நம் உடலைத் தூக்கிச் செல்கிறது.
மேலும், சிறியதாக உள்ள எதையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்ற பாடத்தை நமக்கு உணர்த்தவே எலியை வாகனமாகக் கொண்டிருக்கிறார் கணபதி.
கணபதியை வணங்குவது எப்படி?
பிள்ளையார் முன் நின்று அவரைத் துதித்து, தலையில் குட்டிக் கொண்டு பக்தர்கள் வழிபடுவதை நாம் பார்த்திருக்கிறோம். முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடது பக்கத்திலும், இடது கையால் வலது பக்கத்திலும் 3 முறை குட்டி, காதுகளைப் பிடித்தபடி தோப்புக் கரணம் போட்டு விநாயகரை வணங்க வேண்டும்.
தோப்புக் கரணம் போடுவதற்கு ஒரு காரணமும் உண்டு. மகா விஷ்ணுவின் ஸ்ரீ சக்கரத்தை பிடுங்கிக் கொண்டு அதை வாயில் போட்டுக் கொண்டாராம் விநாயகர். பலம் பொருந்திய விநாயகரிடம் இருந்த சக்கரத்தை மீட்க என்னன்னவோ முயன்றும் திருமாலாலுக்கு வெற்றி கிட்டவில்லை.
விநாயகர் சதுர்த்தியின்போது கடைபிடிக்க வேண்டிய விரத நடைமுறைகள் :
விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். அதாவது யார் கூப்பிட்டாலும் உடனே ஓடோடி வந்து அருள் தருவார். அதனால் தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும்இ யாரும் சுலபமாக பூஜிக்கும் வகையிலும் இருக்கிறார்.
விநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் பெருக்கி மெழுகி சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டலாம்.
பிறகு பூஜையறையிலே சுத்தம் செய்த ஒரு மனையை வைக்க வேண்டும். அதன் மேல் ஒரு கோலம் போட்டு, அதன் மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்தமாதிரி இருப்பது நல்லது. இந்த இலை மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் கோமயத்திலான பிள்ளையாரை வைக்க வேண்டும். பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பச் செல்லும் எனும் தத்துவம்தான் பிள்ளையார்.
கோமயம் மட்டும் தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம். பத்ரபுஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம் பூ மாலை, அறுகம்புல், சாமந்தி, மல்லிகை என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். அதேமாதிரி முடிந்தளவுக்கு சில வகைப் பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு ரொம்பவும் பிடித்தமான மோதகத்தைத் தயார் பண்ணிக் கொள்ளலாம். அதாவது தேங்காய் பூரணத்தை உள்ளே வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். உள்ளே இருக்கும் வெல்லப் பூரணம்தான் பிரம்மம்.
அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூரணம் நமக்குக் கிடைக்கும். (விநாயகருக்கு முதன் முறையாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி).
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''