வானளாவ உயர்ந்த அழகான இராஜகோபுரத்துடன் மண்டைதீவு திருவெண்காட்டில் அமைந்திருக்கின்ற இந்த சித்தி விநாயகப்பெருமான் ஆலயம் மிகவும் கீர்த்தி பெற்ற மூர்த்தி இருக்கும் புண்ணிய சேஷத்திரமாகும்.
இந்த எல்லையில்லாக் கருணைமிக்க தொல்லை வினை தீர்க்கும் திருவெண்காடு சித்தி விநாயகனுக்கு
ஏவிளம்பி வருட மஹோற்சவம் (27.08.2017) ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு துவஜாரோகணம் எனும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.
பத்து தினங்கள் நடைபெறும் இத் திருவிழா காலங்களில் எம் பெருமான் மெய்யடியார்கள் அபிஷேகத்துக்கு தேவையான பால், தயிர், இளநீர், புஸ்பம், அறுகம்புல், வில்வங்கள் ஆகியவற்றை வழங்குவதுடன் ஆசார சீலர்களாக ஆலயத்துக்கு வருகை தந்து சரியைத் தொண்டாற்றி இஷ்ட சித்திகளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.
இங்ஙனம்.
ஆலய தர்மகர்த்தாக்கள்
பொ.வி.திருநாவுக்கரசு
இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் -
யாழ்ப்பாணம் , இலங்கை.