விநாயக ஷஷ்டி விரதம் (பெருங்கதை விரதம் ) 14.12.2016 புதன்கிழமை தொடக்கம் 03.01.2017 செவ்வாய்க்கிழமை கஜமுகசங்காரத்துடன் நிறைவடையும்.
திருக்கார்த்திகை நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டு வரவேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒரு நூல் திரி தனியாக எடுத்து வைக்கவேண்டும். 21-வது நாளில் சஷ்டியும், சதயமும் கூடும் நேரத்தில் ஆவல்களை நிறைவேற்றும் ஆனைமுகன் சன்னிதியில் ஐந்து வகைப் பொரி வைத்து, ஆவாரம் பூ அருகில் வைத்து, கருப்பட்டிப் பணியாரம் செய்து கணபதியை வழிபாடு செய்ய வேண்டும்.
நெல் பொரி, கம்புப் பொரி, சோளப்பொரி, அவல் பொரி, எள் பொரி என்பது ஐந்து பொரிகளாகும்.
விநாயகரை வழிபட வேண்டிய அந்த நாள், மார்கழி மாதம் 19-ந் தேதி (3.1.2017) அன்று வருகிறது. அன்றைய தினம் விரதமிருந்த விநாயகரை வழிபட்டு வந்தால் வாழ்வில் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
ஆண், பெண் யார் வேண்டுமானாலும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். திருமணம் தடைபடுபவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
ஓம் கம் கணபதயே நமஹ...!!
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
இன்பமே சூழ்க ... !
எல்லோரும் வாழ்க . . . !
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'