கணேசரின் யானைத் தலையின் தத்துவம் யாதெனில் யானை சிறந்த அறிவு படைத்தது. யானைக்கு மேதா சக்தி அதிகம் மேலும் யானையின் காதுகள் பெரியதாக இருப்பதால் நுண்ணிய சப்தத்தைக் கூட அதனால் கிரகிக்க முடிகின்றது. இறைவன் புகழைக் கேட்பது என்ற ஆன்மீக சாதனையின் முதற்படிக்கு காதுகள் கூர்மையாக இருப்பது அவசியம் யானை புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் ஓரே மாதிரி எடுத்துக் கொள்கின்றது. தேவையற்றவையை உதறி விடுகின்றது. நல்ல விஷயங்களை மௌனமாக ஏற்றுக்கொள்கின்றது. இவ்வாறு மனித குலத்திற்கு அத்தியாவசியமான பாடங்களை விநாயகர் நமக்கு கற்றுத் தருகிறார்.
அவரது வாகனம் மூஞ்சுறு. மூஞ்சுறு இருளில் தான் சஞ்சரிக்கும் அத்துடன் மூஷிகத்திற்கு வாசனை பிடிக்கும். வாசனை பிடித்துக்கொண்டே எந்தெந்த உணவுப்பொருள் எங்கிருக்கிறது எனக் கண்டு கொள்ளும் ஆன்மீகத்தில் இருள் என்பது அஞ்ஞானத்தையும் வாசனை என்பது ஆசைகனையும் குறிக்கிறது. எனவே தான் அஞ்ஞானத்தையும் ஆசைகளையும் கட்டுப்பாட்டில் வைப்பவர் என்பதை விளக்கவே அவற்றின் உருவமாக விளங்கும் மூஷிகத்தை வாகனமாகக் கொண்டு உள்ளார்.
விநாயகர் சதுர்த்தியில் விசேடமான உணவுப் பண்டங்கள் கடவுளுக்கு நிவேதனமாக அளிக்கப்படுகின்றன. அப்பண்டங்கள் நீராவியில் தயாரித்தவை அல்லது எள் அறுபடையாகும் எள்ளானது சுவாச சம்பந்தமான நோய்களையும் கண்நோய்களையும் தீர்க்க வல்லது நீராவியில் வெந்த பண்டங்கள் சீரயிக்க கூடியவை ஆகும். இவ்வாறு முன்னோர்கள் ஆரோக்கியமும் ஆனந்தமும் கூடிய வகையில் இறைவனை வழிபட்டார்கள்.
விநாயகர் பூசைக்கு அறுகம்புல் பயன்படுத்தப்படுகிறது. அதற்குரிய காரணத்தை விளக்க புராணங்களிலே ஒரு நிகழ்ச்சி கூறப்படுகிறது. ஒரு முறை சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்தில் தாயம் ஆடிக்கொண்டிருந்தார்கள். இதில் யார் வென்றது என தீர்ப்புக் கூறும் பொறுப்பு நந்தியுடையதாக ஓப்படைக்கப்பட்டிருந்தது. நந்திக்கு ஈஸ்வரன் மீது அபிமானம் அதிகம் அதனால் தோற்ற போது கூட ஈஸ்வரனை வென்றதாக அறிவித்தார். பார்வதி கோபத்தால் நந்தியை சபித்தார் நந்தி பார்வதியின் பாதம் பணிந்து பாவ விமேசனம் கோர பார்வதி கோபத்தால் நந்தியை சபித்தார் நந்தி பார்வதியின் பாதம் பணிந்து பாவ விமோசனம் கோர பார்வதி மனமிரங்கி ஆவணிசட சதுர்த்தியில் என் மகன் கணபதியின் பிறந்த தினத்தில் உனக்குப் பிரியமான அறுகம் புல்லினால் அர்ச்சனை செய்தால் உன் சாபம் நீங்கும் என அருளினார்.
இதிலிருந்து யாருக்கு என்ன பிடிக்குமோ அதை இறைவனுக்குப் படைத்தால் பாவம் விலகும் என்பது தெளிவாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சத்தியத்தை ஸ்தாபிப்பது தான் விநாயக தத்தவம்.உயிர் வாழ்க்கைக்கே தலைவர் விநாயகர். சுயநலம் சுயலாப நோக்கம் அவற்றை வைத்துக்கொண்டு வாழக்கூடாது என்று உணர்த்துபவர். சுயநலத்தை தியாகம் செய்ய வேண்டும். பிறர் நலம் நாடி ஆன்மீக வாழ்க்கை நடாத்த வேண்டும் அதன் மூலம் தெய்வீகத்தை உணர்ந்துகொள்ளவேண்டும்.