Saturday, May 10, 2014

கருவறையில் உள்ள விக்ரகங்களை கருங்கல்லால் செய்வது ஏன்?

                                       

கோயில் மூலஸ்தானத்தில் உள்ள விக்ரகங்களை உலோகத்தால் செய்யாமல் கருங்கல்லால் மட்டுமே செய்கிறார்கள். (ஒரு சில கோயில்களில் சுதை, மரத்தாலும் செய்யப்படுவது விதி விலக்கு). இதற்கு முக்கியமான காரணம் உண்டு.
உலோகத்தின் ஆற்றலை விட கல்லின் ஆற்றல் பலமடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது கல். இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களின் தன்மை விசேஷமாக அடங்கியிருந்து வெளிப்படுவது போல் வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.
கல்லில் நீர் உள்ளது. எனவே தான் இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. (கல்லினுள் நீருற்று இருப்பதை காணலாம்) பஞ்சபூதத்தில் நிலம் என்ற பூதமும் கல்லில் உள்ளது. எனவே தான் கல்லில் செடி, மரம் வளர்கிறது. கல்லில் நெருப்பு உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறது. கல்லில் காற்று உண்டு.எனவே தான் கல்லில் தேரை கூட வசிக்கிறது.
ஆகாயத்தை போல வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான் கருங்கல்லால் கட்டப்பட்ட சில கோயில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது. 
உதாரணம்: திருவையாறு ஐயாறப்பன் கோயில்). எனவே தான் ஐம்பூத வடிவிலிருக்கும் ஆண்டவனை, ஐம்பூத பொருளான கல்லில் வீற்றிருக்கும்படி அமைத்து வழிபாடு செய்யப்படுகிறது.