Friday, March 10, 2017

திருவெண்காடு பொற்சபையில் ஆடல் அரசனுக்கு மாசி மாத வளர்பிறை சதுர்த்தி திருநீராடல் ! ! ! 11.03.2017


நாள் : 11-03-2017 சனிக்கிழமை மாலை மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி

இடம் : அருள்மிகு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு யாழ்ப்பாணம் இலங்கை

இவ்வுலகில் நம் ஆலயங்களில் ஆறுகாலப் பூசை நிகழ்வதைப்போல், தேவர்களும் இறைவனுக்கு தினமும் ஆறு நேர பூசை செய்வதாக சாத்திரங்கள் கூறுகின்றன.

மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். ஒரு நாளிலே வைகறை, காலை, உச்சி, மாலை,இரவு, அர்த்தஜாமம் ஆகிய ஆறு பொழுதுகள் உண்டு. இந்த ஆறு பொழுதுகள் தேவர்கள் ஆறுகால பூஜைகள் செய்வார்கள் ,இந்த ஆறு அபிஷேகங்களையும் குறிக்கும் விதமாகத்தான், கோவில்களில் தினமும் இறைவனுக்கு ஆறுகால பூஜைகள் நடத்தப்படுகின்றன.

தேவர்கள் ஒரு நாளில் :-

1. வைகறைக்குச் சமமானது மார்கழி, 
2. காலைச் சந்திக்குச் சமமானது மாசி. 
3. உச்சிக்காலத்திற்குச் சமமானது சித்திரை, 
4. மாலைக்காலத்திற்குச் சமமானது ஆனி. 
5. இரவுக்குச் சமமானது ஆவணி, 
6. அர்த்தயாமத்துக்குச் சமமானது புரட்டாதி,

இதை ஒட்டி தில்லைசிதம்பரத்திலும் அனைத்து சிவாலயங்களிலும் ஆனந்த நடராஐமூர்த்திக்கு ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் கண்டு நமக்கு அருள்புரிகிறார்.

ஆனந்த நடராஐமூர்த்தியின் அபிஷேகங்கள் :-

1. தேவர்களின் வைகறை பூசை மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்திலும்; ( ஆருத்ரா தரிசனம்)

2. காலைச்சந்தி பூசை மாசி மாத வளர்பிறை ;சதுர்த்தியிலும்

3. உச்சிக்கால பூசை சித்திரை திருவோணத்திலும்;

4. மாலை (சாயரட்சை) பூசை ஆனி மாத உத்திர நட்சத்திரத்திலும்; (ஆனித் திருமஞ்சனம் )

5. இரண்டாம் கால பூசை ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியிலும்;

6. அர்த்தஜாம பூசை புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியிலும்; முறையே நடைபெறுகிறது.

இதனை ஒட்டி வரும் சனிக்கிழமை (11-03-2017) அருள்மிகு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் மாலை மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் அபிஷேக ஆராதனைகள் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளன.

புனிதமும், மகத்துவமும் நிறைந்த இந்த புண்ணிய தினத்தில், சிவன் கோவிலுக்கு சென்று இறைவனையும்,இறைவியையும் வழிபடுவது வாழ்வை சிறப்பாக்க வழிவகுக்கும்.

"அம்மை அப்பனின் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"

ஆனந்த நடராஐமூர்த்தியின் திருநீராடல்  காண  'வருக வருக' என வரவேற்கிறோம்.!


"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
சிவன் அருள் பெறுவோமாக " !!

ஓம் கம் கணபதயே நமஹ...!!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'