
எதிர்வரும் புரட்டாதி மாதம் 04.09.2016 ஞாயிற்றுக் கிழமை காலை 7:04 மேல் 8:58 மணிக்கும் இடையில் வெண்காட்டுப்பெருமானுக்கும் ஸ்ரீ சிவகாமியம்பிகை சமேத ஆனந்த நடராஐமுர்த்திக்கும் ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை சமேத காசி விஸ்வநாதமூர்த்திக்கும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பஞ்சதள இராஐகோபுரத்துக்கும் திருக்குடமுழுக்கு நடக்கப்போகிறது.
''இன்னோரு ஜென்மம் இருந்தா அப்போது பிறப்போம்;
ஒன்னோடு ஒன்னா கலந்து அன்போட இருப்போம்''.
ஆம்! சித்திவிநாயகப்பெருமான் மெய்யடியார்களே! இன்னோரு ஜென்மம் இருந்தா அப்போதும் நாமெல்லாம் திருவெண்காடு சித்திவிநாயகன் மேல் இப்போது போல இதய பூர்வமாக ஒன்னோடு ஒன்னா கலந்து அன்பு செலுத்தி ''அன்பே சிவம்'' என்பதை உணர்ந்து அகிலத்துக்கு உரைப்போம்.
"வர இருக்கும் பிறவியிலும் வாழ்த்திடுவோம் நின் அருளை"."
வர இருக்கும் பிறவியிலும் எம்பெருமான் திருவெண்காடு சித்திவிநாயகன் புகழ் பாடுவோம். அதற்கு இன்னோரு ஜென்மமும் வேண்டும்.
"வேழமுகத்து விநாயகனை தொழ வாழ்வு மிகுத்து வரும்"
குறிப்பு - திருவெண்காடு புண்ணிய சேஷ்திரமும் மண்டைதீவு கிராமமும் இந்திரலோகம் போல் காட்சியளிக்கவிருக்கும் இப்புனித நாளில் இவ்விரிந்த உலகில் பரந்து வாழும் சித்திவிநாயகப் பெருமான் மெய்யடியார்கள் அனைவரும் உங்கள் விமானச் சீட்டுக்களை முன்பதிவு செய்து எம்பெருமானின் திருக்குடமுழுக்கு திருக்காட்சியை கண்ணாரக் கண்டு பேரானந்த மடைவீர்களாக !
இங்ஙனம்.
பொ.வி.திருநாவுக்கரசு
இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)
ஆலய தர்மகர்த்தாக்கள்
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் இலங்கை