மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய்பிறை திரயோதசி (13 ஆம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை நேரம் மட்டும் தான். திரயோதசி நாளில் மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும் பிரதோஷ காலமாகும்.
இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும். தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும்.
பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:
01. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
02. தயிர் - பல வளமும் உண்டாகும்
03. தேன் - இனிய சாரீரம் கிட்டும்
04. பழங்கள் - விளைச்சல் பெருகும்
05. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
06. நெய் - முக்தி பேறு கிட்டும்
07. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்
08. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
09. எண்ணெய் - சுகவாழ்வு
10. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்
"அம்மை அப்பனின் திருவருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்று அறியேன் பராபரமே
"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு"
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'