Thursday, July 3, 2014

திருவெண்காட்டில் ஆனி உத்தர திருமஞ்சன தரிசனம் ! ! !

                 

ஆனி மாதம் (04.07.2014)வரும் ஆனித் திருமஞ்சனம் மிகவும் விஷேசமானது. இந்த ஆனித் திருமஞ்சனம் சிவபெருமானுக்கு உகந்தது. சிவாலயங்களில் சிவனக்கு திருமஞ்சனம் நடைபெறும் இன்று விரதமிருந்து சிவனை வழிபட்டால் சகல விதமான பாவங்களும் தீரும். சிவனுக்கு உகந்த விரதங்களில் இந்த திருமஞ்சனமும் ஒன்று.

மண்டைதீவு - திருவெண்காடு பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து அருள்பாலித்துக்கொண்டு ஆனந்தத் தாண்டவம் புரியும் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஐமூர்த்திக்கு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெறும்.

இன்று சிவதலங்களில் அர்ச்சனையும், ஆராதனையும் நடைபெறும். அன்றைய தினம் விபூதி பூசிக்கொள்ளுதல், ருத்திராட்சம்அணிதல், பஞ்சாட்சரம் ஜபித்தல், வில்வ அர்ச்சனை புரிதல், திருமுறைப் பாடல்கள் பயிலுதல், ஆகிய ஐந்து காரியங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்தால் அனைத்து விதமான பலனும் கிடைக்கும்.


               

        ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத  ஸ்ரீ ஆனந்த நடராஐ மூர்த்தி
திருவெண்காடு மண்டைதீவு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம்

சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித் திருவாதிரை மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம்நடக்கும். சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.



பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்து நாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத் திருவிழா. ஆனி உத்தர நட்சத்திரதன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். இன்று பகல் ஒரு மணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர். இன்று நடராஜர் சன்னதிகளில் ஆனித் திருமஞ்சனம் நடக்கிறது. பக்தர்கள் நடராஜரைத் தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க இன்று நல்லநாள். கலையார்வம் மிக்க மாணவர்கள் இன்று அவசியம். நடராஜரைத் தரிசிக்க வேண்டும்.




சைவ மரபில், கோயில் என்றாலே அது சிதம்பரம் நடராஜர் கோயில் என்பர். முதல் நாள் முதல் எட்டாம் திருவிழா வரை உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ் கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் முதலிய பஞ்சமுர்த்திகளும் வாகனங்களில் எழுந்தருள்வர். ஒன்பதாம் நாளில் பஞ்ச மூர்த்திகள் அனைவரும் ஐந்து தேர்களில் பவனி வருவார்கள். 


நடராஜப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலாவந்தபின்னர் இரவில் ராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் தங்குவார். ஆனி உத்திரமான பத்தாம் நாளன்று வைகறையில் ஆனித் திருமஞ்சன அபிஷேகம் விமரிசையாக நடைபெறும். பகல் ஒரு மணிக்கு நடராஜரும், சிவகாம சுந்தரியும் ஆனந்த நடனம் செய்தபடியே, ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வர்.




பெருமாளும், சிவகாமி அம்மனும் மாறி மாறி நடனம் செய்து சிற்றம்பல மேடைக்கு எழுந்தருளும் காட்சி அனுக்கிரக தரிசனமாகும். அன்றிரவு மீண்டும் சித்சபையாகிய சிற்றம்பலத்தில் கடாபிஷேகம் நடைபெறும்.


"திருச்சிற்றம்பலம்"