முழுமுதற்கடவுளெனப் போற்றப்படும் ஸ்ரீவிநாயகருக்கு உகந்த நாள் இன்று (23 Oct 2017) . இன்றைய தினம் நாக சதுர்த்தி ஆராதிக்கப்படுகிறது.
நாக சதுர்த்தி என்றால் ராகு கேதுவுக்கு உரிய அற்புதமான நாள்தான் இது. இந்த நாளில் விநாயகப் பெருமானை வணங்குவதே வளம் சேர்க்கும் என்கின்றன ஞானநூல்கள்!
ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் வருகிற நாக சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வணங்கி , இந்த நாளில் வழிபட்டால் வளம் பெறலாம் என்பது உறுதி.!
நாகத்தையே பூணூலாக அணிந்து கொண்டிருக்கும் விநாயகப்பெருமானே! உனக்கு நமஸ்காரம் என்கிறது விநாயக அஷ்டோத்திரம்.
இன்றைய தினம் நாக சதுர்த்தசி. இந்த நாளில் அருகம்புல் சார்த்தி, கொழுக்கட்டை அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து வணங்கினால், ராகு கேது முதலான தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகும். சங்கடங்கள் அனைத்தும் விலகும்! சந்தோஷங்கள் பெருகும்.
இந்த நாளில், லட்சுமி குபேர பூஜை செய்வதும் விசேஷம். அல்லது அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, ஸ்ரீமகாலட்சுமித் தாயாரை வணங்கிப் பிரார்த்தித்தால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்!
சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், நாக சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபடுவதுடன், அருகில் உள்ள புற்றுக்கோயிலுக்குச் சென்று, நாகராஜரை முட்டை, பால் வைத்து வழிபட்டால், சர்ப்ப தோஷ நிவர்த்தி நிச்சயம்!
ஓம் கம் கணபதயே நமஹ...!!
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
இன்பமே சூழ்க ... !
எல்லோரும் வாழ்க . . . !
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'