Tuesday, February 6, 2018

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகப்பெருமானை அர்த்தயாமப்பூசை செய்து வழிபட்ட சப்த கன்னியர்கள் ! ! !


ப்தமாதாக்கள் என்று அழைக்கப்படும் சப்த கன்னியர் வழிபாடு என்பது ஆதியில் இருந்தே அம்பிகை வழிபாட்டின் ஒரு அங்கமாக விளங்குகிறது. சக்தி வழிபாட்டில் சப்த கன்னியர் வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது.

அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க, ஆண் பெண் இருவர் உறவில் பிறக்காமல், அம்பிகையின் அம்சத்திலிருந்து பிறந்தவர்களே இந்த சப்த கன்னிகைகள். ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகளும் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

ப்ராம்மி

அம்பிகையின் முகத்தில் இருந்து உதித்தவள் தான் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதியான இவள், கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றிய ப்ராம்மி, நான்கு முகங்கள், நான்கு கரங்கள் என காட்சித் தருபவள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.

ஞான ஸ்வரூபிணியான இவளது காயத்ரி மந்திரத்தை மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால், ஞாபக மறதி நீங்கிவிடும். ஆனால் அவ்வாறு ஜெபிக்கும் போது கண்டிப்பாக அசைவம் தவிர்க்க வேண்டும்.

வாராஹி

அம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வாராஹி. பிருஷ்டம் பகுதியின் வேலையானது நமது உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதும், உடம்பைத் தாங்குவதும், அதற்கு ஓய்வு தருவதும் ஆகும். பன்றி முகத்தோடு காட்சியளிக்கும் இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குபவள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். சிவனின் அம்சமாக கருதப்படும் இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு.

மிருக பலமும், தேவகுணமும் கொண்ட இவள் சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி, லலிதாம்பிகையின் படைத்தலைவியாக திகழ்பவள். தண்டினி என்ற சிம்ஹ வாஹினியான இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.

மகேஸ்வரி

அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. இவளின் சக்தியால்தான் ஈசன் சம்ஹாரமே செய்கிறார். முக்கண்ணுடன், ஜடா மகுடத்துடன் மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். இவளை வழிபட்டால், நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.

இந்திராணி

அம்பிகையின் அடி வயிற்றில் இருந்து தோன்றியவளான இந்திராணி, இந்திரனின் அம்சம். யானையை வாகனமாகக் கொண்ட இவள் சொத்து சுகம் தருபவள். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணி, அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தந்து, முறையான காம சுகத்தைத் தருவதும் இவளின் பணி. மணமாகாத ஆண், பெண் இவளை வழிபடுவதன் மூலம், மிகப்பொருத்தமான துணையை அடைவார்கள்.

கௌமாரி

முருகனின் அம்சமான கவுமாரிக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. அஷ்ட திக்கிற்கும் அதிபதியான இவளின் வாகனம் மயில். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்.

வைஷ்ணவி

அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. விஷ்ணுவின் அம்சமான இவளின் வாகனம் கருடன். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள், செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகிறது.

சாமுண்டி

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியே சாமுண்டி. தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள். சப்த கன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருக்கும் இவளே மனிதர்களுக்கு மட்டுமல்ல, தேவர்களுக்கும் வரங்களை அருளுபவள். இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள்.

சப்த கன்னியரை,முழு மனதோடு, உண்மையான பக்தியுடன் மனதால் நினைத்தால் அன்பும், அபயமும்,அருளும் நல்கும் அற்புத தேவியர் இந்த சப்த கன்னியர்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் 
வேறொன்று அறியேன் பராபரமே

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'