Thursday, June 20, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் தடைகளை நீக்கும் குரு வார சங்கடஹர சதுர்த்தி ! ! ! 20.06.2019


ங்கடஹர சதுர்த்தி நன்னாளில், கணபதியை வழிபடுவோம். கவலைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் ஆனைமுகத்தான். இன்று  குருவார சங்கடஹர சதுர்த்தி 

விநாயகப் பெருமானுக்குரிய ஒரு சிறப்பான தினமாக ஆனி சங்கடஹர சதுர்த்தி தினம் வருகிறது. இந்த ஆனி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கின்ற அற்புதமான பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.


ஆனி மாதத்தில் ஆனி பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும் நாள் ஆனி தேய்பிறை சதுர்த்தி அல்லது மாத சங்கடஹர சதுர்த்தி தினம் எனப்படுகிறது. விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினம் இந்த ஆனி சங்கடஹர சதுர்த்தி. இந்த தினத்தில் விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சிறப்பான நன்மைகள் ஏற்படும்.

ஆனி தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வசமிக்க பூக்கள், அபிஷேக பொருட்கள் தந்து, ஆராதனை பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

ஆனி மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். வீடு கட்டுவது, சொத்துக்கள் வாங்கல் போன்ற முயற்சிகளில் தடைகள் நீங்கி, வெற்றிகள் உண்டாகும். நீதிமன்றங்களில் இருக்கும் வழக்கங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வர வழிவகை செய்யும் ஆனி மாதம் மிதுன ராசியில் பிறப்பதால் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு புதன் கிரக தோஷங்கள் நீங்கும்.

சுபம்

ஓம் கம் கணபதயே நமஹ...!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'