Wednesday, February 12, 2020

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் சங்கடஹர சதுர்த்தி ! ! ! 12.02.2020


அற்புதக் கீர்த்தி வேண்டின் மண்டைதீவு சென்று சித்திவிநாயகரைத் தரிசிக்கவேண்டும் .

இன்று 12/2/2020 புதன்கிழமை சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று திருவெண்காடு சென்று சித்திவிநாயகரைத் தரிசிக்க அந்த சித்தி விநாயகரின் பரிபூரண அருளும் முக்தியும் கிடைத்த உணர்வு!-அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது பிள்ளையார் என்ன சொல்கிறார்? ‘யாமிருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் பெருகும் திருவெண்காடு சித்தி விநாயகர் திருவடிகளே சரணம் !

மண்டைதீவு கிராமம், யாழ்பாணத்துக்கு அருகில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அழகான நுழைவாயிலைக் கடக்கும்போதே தூரத்தில் கிழக்கு நோக்கிய கோபுரம் தெரிகிறது. அத்துடன் எழில் கொஞ்சும் வங்ககடல் அலைகள் நித்திலம் கொளிக்கும். வழியெல்லாம் அருகம்புல் 

கோயிலுக்கு இரு வாசல்கள். கிழக்கில் உயரிய பெரிய கோபுரம். கோயில் நிர்வாகம் நடத்தும் தேங்காய், பழக் கடையில் அர்ச்சனைத் தட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றால், நேர்த்தியான சிற்பங்களைக் காணலாம். மனதைக் கொள்ளை கொள்ளும்!

தெய்வீக அழகு

உள்ளே சென்றதும் நெடிதுயர்ந்த கொடிமரம். சித்தி விநாயகர். எங்கு நின்று பார்த்தாலும் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்படி மனம் குளிரத் தரிசிக்கலாம்.

சாமியைத் தரிசிக்கும்போது சும்மா அதைத் தா, இதைத் தா, பதவி உயர்வு கொடு, இடமாற்றத்துக்கு ஏற்பாடு செய் எனப் பெரிய லிஸ்ட் கொடுப்பது இருக்கட்டும். அவருக்குத் தெரியாதா என்ன? கொஞ்சம் அவரது தெய்வீக அழகையும் அனுபவித்துப் பார்ப்போமே!

சித்தி விநாயகர் கரிய, பெரிய உருவம். அகன்ற காதுகளுடன் யானை முகம். கால்களைப் பாதியாய் மடித்து, ஆசனத்தில் வயிறு படியாமல் அமர்ந்திருக்கும் அர்த்த பத்மாசனம் எனும் திருக்கோலம். வெள்ளிக் கவசத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். தும்பிக்கையில் மோதகம்.

பிள்ளையாரின் முன்பு இடப்புறம் 4, வலப்புறம் 4, நடுவில் 1 என மொத்தம் 9 சர விளக்குகள். அவை நவக்கிரகங்களைக் குறிப்பவையாம். இவரிடம் வந்துவிட்டால் அவர்கள் வம்பு செய்ய மாட்டார்கள்! சித்தி விநாயகர் முன்பு 16 தீபங்கள் ஒரே நேர்கோட்டில் வரிசையாய் ஒளிவிடும் பாருங்கள்!

அம்பலவாணர் சித்தி விநாயகனின் பாதம் பணிந்தால், 16 செல்வங்களுக்கும் அதிபதி ஆகலாம் என்பதைக் குறிக்கிறது அது! இந்தக் சித்தி விநாயகர் ஓம் எனும் ஓங்கார வடிவினர். ஞான சொரூபமானவர். 

600 வருடப் பழமை

இந்திரலோகத்துக் கற்பக மரம், அள்ளி அள்ளித் தரக்கூடிய வளம் பெற்றவர் இந்தக் சித்தி விநாயகர். வந்தவர்களுக்கு வேண்டியன நல்கும் வள்ளல். சித்தி விநாயகருக்குச் சாத்திய மாலையில் ஒரு பாதியைக் கழுத்தில் அணிவிக்கிறார் குருக்கள். நான் எனும் எண்ணம் விலகுகிறது.

ஏதோ ஒரு சக்தி உடம்பினுள் ஊடுருவுவதுபோல் சிலிர்ப்பு ஏற்படுகிறது! சித்தி விநாயகரின் திருவருளை உணர முடிகிறது. பின்னர், ஆனந்த நடராஐ மூர்த்தி சிவகாமி அம்பிகையையும் காசிவிஸ்வநாதமூர்த்தி காசிவிஸாலாட்சி அம்பிகையையும் தரிசித்துவிட்டுப் பிராகாரத்தைச் சுற்றி வரும்போது,

பைரவர், நவக்கிரகங்கள், சண்டிகேசுவரர் உள்ளிட்ட பரிவார தேவதைகளை வணங்கிய பிறகு அலங்கார மண்டபத்தில் உள்ள ஓவியங்களைப் பார்த்து ரசிக்கலாம். இங்கிருக்கும் அற்புதமான பிள்ளையார் சித்திரத்தை நாம் எந்தப் பக்கத்தில் நின்று பார்த்தாலும் பிள்ளையார் நம்மைப் பார்ப்பது போலவே தோன்றுகிறது.

இடம், வலம், முன்னே, பின்னே என நடந்து பார்க்கிறோம், பிள்ளையாரின் பார்வையும் நம்முடன் நகர்கிறது! என்னே ஒரு தத்துவம்! நாம் எங்கிருந்தாலும், என்ன செய்தாலும் அவர் பார்வையிலிருந்து தப்ப முடியாது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்!

இக்கோயிலை இலங்கநாயக முதலியார் வம்சத்தினர் நிர்வகித்து வருகிறார்கள். அவ்வூரிலேயே தங்கி தினந்தோறும் கோயிலுக்குச் சென்று மேற்பார்வை செய்துவருகிறார்கள். ஆகம விதிகளின்படி 3 கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. மகோற்சவ காலங்களில் அன்னதானம் நடைபெறுகிறது.

ஆல விருட்சம்

கோயிலில் அனைவராலும் அண்ணா என்று அன்புடன் அழைக்கப்படும் சௌந்தராஐ குருக்கள் தலைமையில் அருமையாகபூஜை செய்து நிர்வகிகப்படும் ஆலயத்தை பிள்ளையாரை வணங்கி அருட்பிரசாதங்களான இளம் இனிப்புடைய மோதகக் கொழுக்கட்டையையும் வடையையும் அழகிய வண்ணப் படம் பெற்று, பிள்ளையார் என்ன சொல்கிறார்? ‘யாமிருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் கற்பக விருட்சமாய் வளரும்'. தரிசியுங்கள் மகிழலாம்!நிரந்தர மகிழ்ச்சி

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் திருவடிகளே சரணம் !