Monday, November 4, 2013

இழந்ததை மீட்டுத்தரும் ஈச்சனாரி விநாயகர்

அன்பு, ஆசை, பாசம், நோய் போன்றவை. ஒருவரிடம் அளவுகடந்த அன்பு செலுத்து கிறோம் என்றால் அது அன்புக்கடல். அந்த அன்பு மிகுதியாகும்பொழுது வருவது ஆசை. அது மிகுதியாகும்போது ஆசைக்கடல். அதுவும் மிகுதி யாகும்போது பாசக்கடல்.

“அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது’
என்கிறார் வள்ளுவர். ஆழி என்றால் கடல். பிறவாழி என்று குறிப்பிட்டுள்ளது
அந்த பந்தபாசம் மிகுதியாகும் பொழுது வருவது நோய்க்கடல். இத்தகைய பிற ஆழிகளைக் கடக்கவேண்டுமென்றால் அறவாழி அந்தணனிடம் சரணா கதி அடைவதுதான் வழி. அப்படி யென்றால் யார் அவன்?
தர்மசிந்தனையிலே கடலைப் போன்றவன் அண்ட சராசரங்களை படைக்கின்ற இறைவன். அனைத்து தெய்வங் களும் சக்திவாய்ந்தவைதான். அதேசமயம் முதலில் பிள்ளையார் சுழி போட்டுதான் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவது மரபு. எனவே அனைத்து தெய்வங்களின் சக்திகளும் ஒன்றுசேர்ந்த அம்சமாக விளங்குகின்றவர் விநாயகர். அவரைச் சரணடைந்தால் பிறவிப் பெருங்கடலைக் கடந்து விடலாம். ஞானமுதல்வனான அந்த விநாயகப் பெருமான் சிறப்புடன் விளங்கும் தலங்கள் பலவுண்டு. அவற்றிலொன்று கோவையில் அமைந்திருக்கும் ஈச்சனாரி விநாயகர் கோவில்.

மேலைச்சிதம்பரம் எனப் போற்றப்படுகின்ற பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தைக் கட்டிக்கொண்டிருந்த சமயத்தில், அந்தக் கோவிலுக்காக ஒரு விநாயகர் சிலை வடிக்க மதுரையிலுள்ள சிற்பக் கலைக்கூடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அங்கு அழகுற வடிவமைத்த சிலையை மாட்டுவண்டி மூலம் பேரூருக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப் பட்டது. அவ்வாறு வரும்போது கோவை எல்லையில் ஈச்சங்காடு என்ற இடத்தில் வண்டியின் அச்சு உடைந்துவிட்டது. எனவே விநாயகர் சிலையை இறக்கி மேடான பகுதியில் வைத்துவிட்டு வண்டியைப் பழுதுபார்த்தனர். பின்னர் விநாயகர் சிலையை எடுத்து வண்டியில் வைக்க எவ்வளவோ முயன்றும் அதை அசைக்கவே முடியவில்லை.

அச்சமயம் யானை பிளிரும் சப்தத்துடன் ஒரு அசரீரி குரல், “நான் இங்கேயே இருக்கிறேன்’ என்று ஒலித்தது. அதைக்கேட்டு அதிசயித்த பக்தர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டு விநாயகர் விருப்பப்படி- ஈசன் உத்தரவுப்படி அந்த இடத்திலேயே ஈச்சங்காட்டு விநாயகர் என்ற திருநாமத்துடன் சிறிய அளவில் கோவில் எழுப்பினர். அதன்பின் ஒரு பிராகாரத்துடன், ஒரு சுற்று மண்டபத்துடன் 1973 வரை காட்சி யளித்தது. அதன்பின் ராஜகோபுரம், உள்சுற்று மண்டபம், வெளிச்சுற்று மண்டபம், யாகசாலை மண்டபம், மகாமண்டபம் என எழிலுடன் வடிவமைத்து 13-6-1977-ல் சிறப்பாக கும்பா பிஷேகம் செய்தனர். ஈச்சங்காட்டு விநாயகர் என்ற பெயர் மருவி ஈச்சனாரி விநாயகர் என்றானது.
இன்று தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், சிறப்பு டன் விளங்குகிறது ஆலயம்.
இந்த விநாயகர் பெருமை குறித்து ஒரு செவிவழிச் செய்தி உண்டு. சுமார் எண்பது வருடங் களுக்குமுன் ஒரு வசதிமிக்க குடும்பம், ஈச்சனாரிக்கு தென்புறம் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு சிற்றூரில் வாழ்ந்து வந்தது. ஒருநாள் நள்ளிரவில் கொள்ளையர் இருவர் அவர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த நகை களைக் களவுசெய்து தப்பித்துச் சென்றனர். பொழுது விடிந்த பின்னரே நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. வீட்டிலிருந்தபடியே இந்த விநாயகப் பெருமானை வணங்கி கோரிக்கை வைத்தாள் அந்த குடும்பத் தலைவி. அச்சமயம் கொள்ளையர்களை ஒரு ஒற்றை யானை பிளிறிய வண்ணம் துரத்திவந்தது. கொள்ளை யர்கள் அங்குமிங்கும் ஓடி ஈச்சங்காட்டு வழியே வந்து, விநாயகர்முன் நகைகளைப் போட்டு விட்டு வடக்கு நோக்கி ஓடி, ரயிலில் அடிபட்டு மாண்டனர். அன்றைய தினம் சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி விரத மிருந்து விநாயகப் பெருமானை வழிபடுவது அந்தப் பெண்மணியின் வழக்கம். களவுபோன நகைகள் அந்தப் பெண்மணிக்கு திரும்பக் கிடைத்தது. எனவே சங்கடஹர சதுர்த்தியில் இவரை வழிபட்டால் இழந்ததைத் திரும்பப் பெறலாம் என்னும் நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.