Sunday, September 22, 2013

புரட்டாதி சனி விரதம் 21-09-2013 ஆரம்பம்




இவ்வாண்டுக்கான் சனி விரதமானது நிகழும் புரட்டாதி மாதம் 5 ஆம் நாள் செப்ரம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. தொடர்ந்து வரும் நான்கு சனிக்கிழமையும் புரட்டாதி சனி விரதம் அனுஷ்டிக்க வாழ்வு சிறந்தோங்கும்.




எதிர்வரும் புரட்டாதி மாதம் 26 ஆம் நாள் அதாவது ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி இறுதி சனி விரதம் பக்தர்களால் சனிஸ்வர தலத்திலும், சகல ஆலயங்களிலுமுள்ள நவக்கிரக சந்நிதான த்திலும் சிறப்பாக இடம்பெறும். சனியைப் போல் கொடுப்பானும் இல்லை. கெடுப்பானும் இல்லை என்று கூறப்படுகின்றது.

நவநாயகர்கள் என்று சொல்லப்படுகின்ற சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் வியாழன் வெள்ளி சனி ராகு கேது ஆகிய ஒன்பது கிரகங்களில் சனிஸ்வரம் பகவானுக்கு தனிச் சிறப்பும் எமது ஜனனகால கோசாரபலன்களை எடுத்துத் தரும் சோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமான பாகத்தையும் சனிஸ்வரன் பெறுகின்றார். மனித வாழ்வின் காலவோட்டத்தில் சனிபகவானே அதிக காலம் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்கின்றார். அதாவது ஏழரை ஆண்டு காலம் தங்கி இருப்பார்.

இதில் இரண்டரை ஆண்டுகாலம் நற்பலன்களையும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் மத்திய பலனையும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் தீய பலன்களையும் கொடுப்பார் என சோதிடத்தில் சொல்லப்பட்டிரு க்கின்றது. எமது ஜனனகால ஜாதிப் பலன்கள் அதாவது கோசாரபலன்களை வைத்து நன்மை தீமைகள் வந்து சேருகின்றன.