Saturday, December 26, 2015

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற ஆருத்ரா தரிசனம் ( 26-12-2015) படங்கள் இணைப்பு


மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 26.12.2015 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.



மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை


'சித்தியும் புத்தியும் சக்தியும் தருகின்ற
சர்வலோக நாயகன்
திருவெண்காடுறை சித்திவிநாயகன்''

"திருவெண்காடு, சுவேதாரணியம்பதி, ஆதி சிதம்பரம், பொன்னம்பலம், பூலோககைலாய, புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்."














திருவெண்காடு பொற்சபை (பொன்னம்பலம்)


"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் 
இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் 
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.."


பொருள்‬:

வளைந்த புருவமும், கோவைப்பழம் போல சிவந்த வாயும் கொண்டவரே! எப்போதும் புன்னகையை தவழ விடுபவரே! கங்கை தாங்கும் சடை பெற்றவரே! பவள மேனி முழுவதும் பால் போன்ற திருநீறு அணிந்தவரே! அழகாகத் தூக்கிய திருவடியைக் கொண்டவரே! உம்மைத் தரிசிப்பது ஒன்றே, நான் இந்த பூமியில் மனிதப்பிறவி எடுத்ததன் பயனாகும்.


 ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்


"மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர்கள் போய் அகலப்

பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க
அன்ன நடைமட வாளுமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே"



மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கை சிவகாமி யாட
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரமனாட
கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட
குழந்தை முருகேசனாட
ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி
அட்ட பாலகருமாட
நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
விரைந்தோடி ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற திருவெண்காடுவாழ் நடராஜனே!


கோபுர வாயில் தரிசனம் திருக்கைலாய தரிசனம்



மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்தி திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.


கோபுர வாயில் தரிசனம் திருக்கைலாய தரிசனம்




"ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் 
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் 
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து 
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே".


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
பொற்சபை (பொன்னம்பலம்)
முகப்புத் தோற்றம்.









உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்







ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''