Monday, June 16, 2014

திருவெண்காட்டில் சங்கடஹரசதுர்த்தி விரதம் 16.06.2014


ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று இருக்கும் விரதத்தைத் தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்று கூறுகின்றனர்.

சிவபெருமான் விநாயகரை கணங்களுக்குத் தலை வணங்கியதால், கணநாதன் என்ற பெயர் பெற்றார். நான்முகன் அஷ்டசித்திகளை ஒப்படைத்து சித்தி விநாயகர் என்ற சிறப்புப் பெயரைச் சூட்டினார்.

இதனால், விநாயகர் நவகிரகங்களில் சந்திரனை பார்வையிடச் சென்றார். அழகோடு கவர்ச்சியும் கொண்டதால், சந்திரனுக்கு ஆணவம் ஏற்பட்டது. ஆணவத்தால் செருக்குற்ற சந்திரன் விநாயகரின் வேழ முகத்தையும், பானை வயிற்றையும் கண்டு பரிகசித்து வாய்விட்டு சிரித்தான். கோபம் கொண்ட கணபதி. சந்திரனின் அழகை யாரும் காணமுடியாதபடி சபித்துவிட்டார். என் சாபத்தை மீறி, உன்னை யார் பார்த்தாலும் பழிபாவங்களுக்கு ஆளாவார்கள்" என்று கூறினார்.

நான்முகன் கூறியபடி, பிரகஸ்பதி சந்திரனிடம் சென்று, சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்க வேண்டிய காலத்தையும், விவரத்தையும் கூறினார். அதன்படி, தேய்பிறை காலத்தில், கிருஷ்ண பட்சம் நான்காவது நாள் சதுர்த்தி திதியில் வழிபட்டு, தனது சாபத்தைப் போக்கிக் கொண்டான்.

இந்த விரதத்தால், நினைத்த காரியம் கைகூடும்; வீண்பழி அகலும்; பகைவர்களும் நண்பர்களாவார்கள்; தீவினை அகலும்; மனச்சுமை நீங்கும்; எல்லா தோஷங்களும் நீங்கும்.

கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே.


ஓம் கம் கணபதயே நமஹ...!!