Friday, February 1, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் செல்வமும் செல்வாக்கும் தரும் சனி மகாபிரதோஷம் ! ! ! 02.02.2019

திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வருவதால் சனி மகாபிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும். நாளை சனிப்பிரதோஷ நாளில் தன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் சிறப்பு பிரதோஷ பூஜைகள் நடைபெற உள்ளது.

சிவபெருமான், தேவர்களைக் காப்பாற்றுவதற்காக ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே பிரதோஷ நேரம் சனிக்கிழமையன்று வந்தால் சனி பிரதோஷம் எனச் சிறப்பு பெறுகிறது.

பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை முப்பது முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் வணங்கி ஆசி பெறுவார்கள். 

அவர்களைப் போலவே பிரதோஷ நேரத்தில் நாமும் சிவபெருமானை வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக்கொள்ள பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல் எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.

பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். 

அதேபோல் நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, அஷ்டமச்சனி ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள், சனி பிரதோஷ வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் சனீஸ்வர பகவானின் கோபம் தணிந்து துன்பங்கள் நீங்கும்.

சனி பிரதோஷத்தன்று, மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன் 24 நிமிடங்களும், சூரிய அஸ்தமனத்திற்கு பின் 24 நிமிடங்களும் உள்ள 48 நிமிடங்கள் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் வழிபாடு செய்வது சாலச்சிறந்தது.

ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். 

சனி பிரதோஷம், சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது ஆகும்.

சனி பிரதோஷத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து அபிஷேகம் செய்து நந்தியெம்பெருமானை வழிபட சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும். 

அன்றைய தினம் நந்திக்கும், சிவபெருமானுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவிப்பது நற்பலன்களை தரும்.

சுபம்

ஓம் கம் கணபதயே நமஹ...!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'