Saturday, July 25, 2015

விநாயகர் அகவல் பிறந்த கதை !!!


"சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச்சிலம்பு' என்று ஔவையார்பாடிய விநாயகர் அகவல் தித்திக்கும் தேவகானம். இந்த அகவலில்சில வார்த்தைகள் நமக்குப் புரியாது. ஆனால், விநாயகருக்குமிகவும் பிடித்த பாடல் இது. விநாயகரே ஔவையார் முன் நேரில்தோன்றி, அவரைப் பாடும் படி சொல்லி, தலையாட்டிக் கேட்டபாடல் இது.!! (திருக்கோவிலூர் வீரட்டானத்தில் அருளியது)

திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெருங்கிய நண்பர். ஒருநாள்சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் வெறுத்து, கைலாயம் செல்லஎண்ணி சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார். சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்ல ஐராவதம்என்னும் தேவலோக வெள்ளை யானையையும், தேவர்களையும் அனுப்பினார். சுந்தரரும் வெள்ளையானை மீது கிளம்பி விட்டார். 

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை


"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பொன்னம்பலம் பூலோககைலாய புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்." 

அப்போது வெளியில் சென்றிருந்த சேரமான் பெருமாள், வானத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்தார். அவருக்குச்சுந்தரரைப் பிரிய மனமில்லை. எனவே, தன் குதிரையில் ஏறியஅவர் அதன் காதில் "சிவாயநம' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தைஓதினார். உடனே குதிரையும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது. இதை அறிந்த மன்னரின் படைத் தலைவர்கள் அவரைப் பிரியமனமின்றி தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர். அவர்களது உயிரும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது. 

இப்படி சென்ற சுந்தரரும், சேரமான் பெருமாளும், கீழ் நோக்கிப்பார்த்தனர். ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில்இருப்பதைக் கண்டு "நீயும் வாயேன் பாட்டி' என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று ஔவைப்பாட்டி பதில்அளித்தாள். அப்போது விநாயகர் ஔவையார் முன் தோன்றி, "நீயும் கைலாயம் போக வேண்டுமா?' என்றார்.


"நீ இருக்கும் இடமும், உன்னைப் பூஜிக்கும் இடமுமே எனக்கு கைலாயம் போலத்தான். நீ விருப்பப்பட்டால் என்னைகைலாயத்திற்கு கொண்டு போ' என்றார் ஔவையார். 

"ஔவையே! நீ என்னைப் பற்றி ஒரு பாட்டுப் பாடு' என்றதும், "சீதக்களப' என ஆரம்பிக்கும் அகவலைப் பாடினார். பாடி முடிந்ததும், விநாயகர் மகிழ்ச்சியில் அவளைத்தும்பிக்கையால் தூக்கி, சுந்தரரும் சேரமான் பெருமாள்நாயனாரும் கைலாயம் சென்று சேர்வதற்கு முன்பாகவே கொண்டுசேர்த்து விட்டார் விநாயகப்பெருமான்.!!



ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

 திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''