Wednesday, July 29, 2015

திருவெண்காட்டில் ஏழ்மையை விரட்டும் பிரதோஷ வழிபாடு ! ! ! 28.07.2015


சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண் ணியத்தை பெறு கிறார்கள். ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு - இலங்கை
பொற்சபை (பொன்னம்பலம்)


"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி"

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்: 

1. பால் நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். 
2. தயிர் பல வளமும் உண்டாகும் 
3. தேன் இனிய சாரீரம் கிட்டும் 
4. பழங்கள் விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் செல்வம் பெருகும் 
6. நெய் முக்தி பேறு கிட்டும் 
7. இளநீர் நல்ல மக்கட்பேறு கிட்டும் 
8. சர்க்கரை எதிர்ப்புகள் மறையும் 
9. எண்ணெய் சுகவாழ்வு 
10. சந்தனம் சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் தெய்வ தரிசனம் கிட்டும் 

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு - இலங்கை
ஸ்ரீ காசி விஸ்வநாதமூர்த்தி ஸ்ரீ காசி விசாலாட்சியம்பாள்


திருவெண்காடு சுவேதாரணியம்பதி பொன்னம்பலம் பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி.

பிரதோஷ வழிபாடு பலன்.......

ஞாயிறு பிரதோஷம் -சுப மங்களத்தை தரும் 
திங்கள் சோம பிரதோஷம் - நல் எண்ணம், நல் அருள் தரும். 
செவ்வாய் பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும். 
புதன் பிரதோஷம் - நல்ல புத்திரபாக்யம் தரும் 
வியாழன் பிரதோஷம் - திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும். 
வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும். 
சனிப் பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும். 

தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும். ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவ பூஜை செய்த பலன் உண்டாகும்.



திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு - இலங்கை
பொற்சபை (பொன்னம்பலம்) நுழைவாயில்

யாரை வழிபட வேண்டும்......

1. அறிவும், வீரியமும், அழகும் பெற முருகப்பெருமானை வணங்கலாம். 
2. ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள ஆஞ்சநேயரை வழிபடலாம். 
3. குடும்ப செழிப்பை பெற திருமகளை வணங்கி வரலாம். 
4. யோக சக்தியையும், மந்திர சக்தியையும் பெற அன்னை பராசக்தியை வழிபட்டு வரலாம். 
5. கலையை, கல்விச் செல்வத்தை பெற சரஸ்வதியை வழிபடலாம். 
6. யோகத்தில் சிறந்து விளங்க பரமேஸ்வரனை வணங்கலாம். 
7. வெற்றிமேல் வெற்றி பெற ராஜகணபதியை வழிபடலாம். 
8. குடும்பத்தை வாட்டிடும் இன்னல்கள் தீர மாரியம் மன், காளியம்மன்,     காமாட்சியம்மன் முதலிய தெய்வங்களை வழிபடலாம். 
9. சற்புத்திரனைப் பெற திருச்செந்தில் ஆண்டவனை வணங்கி வரலாம். 
10. இவ்வுலகத்தில் எல்லாவித இன்பங்களையும் அடைய விரும்புபவர்கள் திருமாலை வழிபடலாம்.




ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''