Wednesday, January 9, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் விக்கினங்கள் தீர்க்க வல்ல விநாயகர் சதுர்த்தி வழிபாடு !!! 09.01.2019


விநாயகர் சதுர்த்தியன்று அவருக்கு இஷ்டமான 21 வகை யான பச்சிலைகளை வைத்து பூஜை செய்தால் இன்னும் விசேஷம். எவ்வளவு பலகாரங்கள், பழங்கள் என ஆடம்பரமாக வைத்தாலும் வைக்காவிட்டாலும் இந்த 21 இலைகள் வைத்து வழிபட்டால் நினைத்தது அத்தனையும் நிறைவேறும்.

அந்த 21 வகைகள் என்னென்ன, அவற்றின் பலன்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
1. முல்லை இலை - வீட்டில்அறம் வளரும்.
2. கரிசலாங்கண்ணி - வாழ்க்கைக்குத் தேவையான பொன்னும் பொருளும் வந்து சேரும்.
3. வில்வ இலை - இன்பமும் நீங்கள் மனதில் விருமு்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அருகம்புல் - அனைத்துவிதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
5. இலந்தை இலை - கல்வியில் பிள்ளைகளுக்கு மேன்மை உண்டாகும்.
6. ஊமத்தை இலை - தாராள மனம் பெருகும்
7. வன்னி இலை - இந்த ஜென்மத்திலும் சொர்க்கத்திலும் கூட மகிழ்ச்சி உண்டாகும்.
8. நாயுருவி இலை - முகத்தில் பொலிவும் உங்களுடைய உடல் உள்ள அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி இலை - மன தைரியமும் வீரமும் அதிகரிக்கும்.
10. அரளி இலை - எடுக்கின்ற எல்லா முயற்சியும் கைகூடி வரும்.
11. எருக்கம் இலை - கருவில் உண்டாகும் குழந்தைக்கு பாதுகாப்பு தரும்.
12. மருத இலைகள் - மகப்பேறு செல்வம் கிடைக்கும்.
13. விஷ்ணுகிராந்தி இலை - நுண்ணறிவு பெருகும்.
14. மாதுளை இலை - பெரும் புகழும் நல்ல பெயரும் கிடைக்கும்.
15. தேவதாரு இலை - எதையும் தாங்குகின்ற மன தைரியம் கிடைக்கும்.
16. மரிக்கொழுந்து இலை - இல்லற சுகம் அதிகமாகக் கிடைக்கப்பெறும்.
17. அரச இலை - உயர் பதவியும் அந்த பதவியின் மூலம் வெற்றியும் கிடைக்கும்.
18. ஜாதிமல்லி இலை - சொந்த வீடு, மனை பாக்கியம் கிடைக்கும்.
19. தாழம்பூ இலை - செல்வச் செழிப்பு உண்டாகும்.
20. அகத்தி இலை - கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
21. அருகம்புல் மாலை அர்ச்சனை இந்த எல்லாவற்றையும் விடவும் புனிதமாகவும் விசேஷமானதாகவும் இருக்கும்.

சுபம்

ஓம் கம் கணபதயே நமஹ...!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'