Thursday, January 3, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் வாழ்வை வளமாக்கும் குருவார பிரதோஷம்!


குருவாரத்தில், அதாவது வியாழக்கிழமையில் பிரதோஷ பூஜையைத் தரிசியுங்கள். குடும்பத்தில் எல்லா சத்விஷயங்களும் நடந்தேறும். இனிமையாக வும் குதூகலத்துடனும் வாழ்வீர்கள்.

குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமை யில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில், மாலை வேளையில், அருகில் உள்ள சிவாலயத்திற்குச் செல்லுங்கள். நந்திதேவர், சிவபெருமான், குருவாரம் என்பதால் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான், கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி முதலானோரை கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

மாலை 4.30 முதல் 6 மணி வரை என்பது பிரதோஷ நேரம். இந்த சமயத்தில், சிவாலயத்தில் உள்ள நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். முடிந்தால், சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலான அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள்.

அதேபோல், செவ்வரளி, வில்வம், அருகம்புல் கொண்டு நந்திதேவருக்குச் சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள்.

குருவார பிரதோஷத்தில் மறக்காமல் தரிசனம் செய்யுங்கள். அபிஷேகப் பொருட்களும் பூக்களும் வழங்குங்கள். இன்னும் இயலுமெனில், தயிர்சாதம் விநியோகம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையையே குளிரப்பண்ணுவார் சிவனார்.

சுபம்

ஓம் கம் கணபதயே நமஹ...!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'