
தை மாதத்தின் முதல் பிரதோஷம் இன்று. எனவே இன்றைய நாளில் (18.01.19), மறக்காமல் சிவ தரிசனம் செய்யுங்கள். மேலும் சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமை அன்று வந்துள்ள பிரதோஷத்தில், நந்திதேவரையும் சிவனாரையும் தரிசித்தால், சுபிட்சம் நிலவும். வாழ்க்கை வளமாகும்!
தை மாதம் பிறந்து வருகிறது முதல் பிரதோஷம் இன்றைய தினம். தை மாதத்தில் வருகிற பிரதோஷ நாளில், சிவாலயம் சென்று வழிபடுவது வளமும் நலமும் தந்தருளும் என்பார்கள்.
இது, தை பிறந்து வருகிற முதல் பிரதோஷம். எனவே மறக்காமல், சிவாலயம் செல்லுங்கள். மாலையில் பிரதோஷ காலத்தில், நந்திதேவருக்கும் சிவனாருக்கும் நடைபெறும் அபிஷேகத்தைக் கண்ணாரத் தரிசியுங்கள். முடிந்தால், அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள்.இயலுமெனில், நந்திதேவருக்கு அருகம்புல் மாலை, வில்வம், செவ்வரளி வழங்கி பிரார்த்தனை செய்யுங்கள்.
மேலும் இது தை முதல் பிரதோஷம் மட்டுமல்ல. சுக்கிர வாரப் பிரதோஷமும் கூட! வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். வெள்ளிக்கிழமையன்று வருகிற பிரதோஷம் விசேஷமானது.
எனவே சுக்கிர வாரப் பிரதோஷத்தில், தென்னாடுடைய சிவனை வணங்கி வேண்டிக்கொள்ளுங்கள். சகல வளமும் நலமும் பெற்று இனிதே வாழலாம். தடைப்பட்ட காரியங்கள் யாவும் விரைவில் நடந்தேறும். பதவி மற்றும் சம்பள உயர்வு சீக்கிரமே கிடைக்கப் பெறுவீர்கள்.
சுபம்
ஓம் கம் கணபதயே நமஹ...!!
இன்பமே சூழ்க ... !
எல்லோரும் வாழ்க . . . !
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'